Published : 04 Sep 2018 06:01 PM
Last Updated : 04 Sep 2018 06:01 PM
ராஜஸ்தானில் ஆளும் பாஜக அரசின் முதல்வர் வசுந்தரா ராஜே வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைப் பெண்களுக்கு இலவச செல்போன் வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளார்.
அதன் விவரம் வருமாறு:
பிரதமர் நரேந்திர மோடியின் 'டிஜிட்டல் இந்தியா' பிரச்சாரத்தை செயல்படுத்தும் முயற்சியில் ராஜஸ்தான் அரசாங்கம் இறங்கியுள்ளது. அதன்படி விரைவில் பாமாஷா யோகாவின் கீழ் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு செல்போன்கள் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.
ஏழை எளியவர்கள் தங்கள் செல்போனில் ஒரு சின்ன பொத்தானை அழுத்துவதன்மூலம் புதிய விண்ணப்பங்கள் வழியாக, ராஜஸ்தானில் முதலமைச்சர் வசுந்தரா ராஜே தலைமையிலான அரசாங்கம் தரும் அனைத்து நன்மைகளையும் பெற முடியும். அவ்வகையில் ஏழை பெண்களுக்கு செல்போன் வழங்கப்படுகிறது.
மாநிலத்தில் உள்ள 5 ஆயிரம் கிராம பஞ்சாயத்துக்களுக்கு இலவச வைஃபை வசதி செய்து தரப்பட்டுள்ளது. இவ்வசதியைப் பெற செப்டம்பர் 1ம் தேதியிலிருந்து செப்டம்பர் 30 வரை விண்ணப்பிக்கலாம்.
மாநில அரசு, மக்கள் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட வேண்டும் எனற எண்ணத்தில் செயல்படுவது இது முதல் முறையல்ல. ஆகஸ்ட் 29 அன்று, டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதற்காக ராஜே பாமாஷா வாலெட் செல்போன் ஒன்றை ஆகஸ்ட் 29ல் அறிமுகப்படுத்தியுள்ளார்.
சென்ற ஆண்டு, போக்குவரத்து மேலாண்மை, 100 டயல் செய்து அவசர போலீஸை அழைக்க, இணையதளக் குற்றங்கள், விடியோ கண்காணிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை போலீஸாருக்கு உடனுக்குடன் தெரிவிக்க அபாய் எனப்படும் ஒரு உயர் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டு மையங்களை தாஸா, ஸ்ரீகங்காநகர், பாகெர், பில்வாரா, கராலி மற்றும் தோலாபூர் ஆகிய நகரங்களில் தொடங்கியுள்ளார் ராஜஸ்தான் முதல்வர், என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் டிசம்பரில் நெருங்கிவருவதை அடுத்து புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் குறைகூறி வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT