Published : 19 Sep 2018 09:23 AM
Last Updated : 19 Sep 2018 09:23 AM
ரபேல் போர் விமானம் கொள்முதல் தொடர்பான எனது கேள்விகளுக்கு பிரதமர் மோடியிடம் பதில் இல்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று ஆந்திர மாநிலம் கர்னூலில் சுற்றுப்பயணம் மேற் கொண்டார். மாலையில் கர்னூலில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டபோது, அப் போதைய பிரதமர் மன்மோகன் சிங், 5 ஆண்டுகளுக்கு ஆந்திரா வுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க லாம் என கூறினார். இதற்கு மாநிலங்களவையில் பாஜக உறுப் பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, 10 ஆண்டுகள் வரை சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என வாதிட்டனர். தற்போது ஆந்திர மக்களை பாஜகவினர் ஏமாற்றி விட்டனர். பிரதமர் மோடி போன்று எனக்கு பொய் பேசத் தெரியாது. ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது என்பது பரிசு அல்ல. அது ஆந்திர மக்களின் உரிமை. காங்கிரஸ் இம்முறை ஆட்சிக்கு வந்ததும் போடும் முதல் கையெழுத்து, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பதற் காகவே இருக்கும்.
காங்கிரஸ் ஆட்சியில், ரபேல் போர் விமானம் ரூ. 526 கோடிக்கு வாங்க முடிவு செய்யப்பட்டது.
இதே விமானம் தற்போதைய பாஜக ஆட்சியில் ரூ. 1,600 கோடிக்கு வாங்கப்படுகிறது. இந்த விமானம் கொள்முதல் தொடர்பான ஒரு ஒப்பந்தத்தை பிரதமர் மோடி தனது நண்பர் அனில் அம்பானிக்கு வழங்கியுள்ளார். பிரதமர் மோடி ஒரு பொருளாதார குற்றவாளி. ரபேல் விவகாரத்தில் நாடாளு மன்றத்தில் எனது கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளிக்கவில்லை. என்னிடம் கண்ணுக்கு நேராகப் பார்த்து பேசும் தைரியம் அவருக்கு இல்லை.
ஆந்திராவில் காங்கிரஸ் தலைவர்கள் பலரது வீடுகளுக்கு நான் சென்றுள்ளேன். இதில் குறிப்பிடத்தக்கவர் ஆந்திர முன்னாள் முதல்வர் தாமோதரம் சஞ்சீவய்யா. தற்போது ஆந்திராவுக்கு சஞ்சீவய்யா போன்ற தலைவர்கள் தேவை. இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
நிகழ்ச்சியில் ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் ரகுவீரா ரெட்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முன்னதாக, கர்னூல் அருகே பெட்டப்படு கிராமத்தில் உள்ள மறைந்த ஆந்திர முன்னாள் முதல்வர் தாமோதரம் சஞ்சீவய்யா வின் வீட்டுக்கு ராகுல் சென்றார். கல்லூரி மாணவ, மாணவிகளுட னும் அவர் கலந்துரையாடினர்.
© 2017 All Rights Reserved. Powered by Summit exclusively for The Hindu
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT