Published : 20 Sep 2018 08:04 AM
Last Updated : 20 Sep 2018 08:04 AM

சூரிய, சந்திர பிரபை வாகனங்களில் கொட்டும் மழையில் ஏழுமலையான் பவனி

திருப்பதி பிரம்மோற்சவத்தின் 7-ம் நாளான நேற்று காலை கொட்டும் மழையில் சூரிய பிரபை வாகனத்தில் உற்சவரான மலையப்ப சுவாமியின் திருவீதி உலா நடைபெற்றது. இரவு சந்திரபிரபை வாகனத்தில் உற்சவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழாவின் 7-ம் நாளான நேற்று காலை திருமலையில் மழை பெய்தது. அப்போது, சூரிய பிரபை வாகனத்தில் உற்சவரான மலையப்ப சுவாமி, 4 மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் திரளான பக்தர்கள் மாடவீதிகளில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர். வாகன சேவைக்கு முன், காளை, குதிரை, யானை ஆகிய பரிவட்டங்கள் செல்ல, அவைகளை தொடர்ந்து ஜீயர் சுவாமிகளின் குழுவினர் வேத பாராயணம் செய்தவாறு பின்னால், செல்ல, பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நடன குழுவினர் நடனமாடியபடி வாகன சேவையில் உற்சாகமாக கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து, மாலை ஊஞ்சல் சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், இரவு, சந்திரபிரபை வாகனத்தில் மலையப்பர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 8-ம் நாளான இன்று காலை தேர்த்திருவிழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. இன்றிரவு, குதிரை வாகனத்தில் உற்சவர் எழுந்தருள உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x