Published : 30 Sep 2018 12:03 AM
Last Updated : 30 Sep 2018 12:03 AM

அக்.18 முதல் சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி? - 3-ம் தேதி ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண், பெண் பாகுபாடு கிடையாது. அனைத்து வயது பெண்களும் அங்கு வந்து வழிபாடு நடத்தலாம் என உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது. எனவே, வரும் அக் டோபர் 18-ம் தேதி சபரிமலை கோயில் நடை திறக்கப்படும் நாள் முதலாகவே, இளம்பெண்களும் அனுமதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

பெண்களில் 10 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகளும், மாதவிடாய் காலம் முடிந்த 50 வயதினை தாண்டியவர்களும் மட்டுமே சபரிமலைக்கு சென்றுவர அனுமதிக்கப்பட்டு வந்தனர். ஆனால், சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கக் கோரி, இளம் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இவ் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சபரிமலை கோயிலில் அனைத்து பெண்களையும் அனுமதிக்கலாம் என அண்மையில் தீர்ப்பு வழங்கியது.

சபரிமலை கோயில் நடையானது, புரட்டாசி மாத பூஜைகளுக்கு பின்னர் தற்போது சாத்தப்பட்டுள்ளது. இந்நிலை யில், ஐப்பசி மாத பூஜைகளுக்காக வரும் அக்டோபர் 17-ம் தேதி மாலை திறக்கப்பட உள்ளது. எனவே, அதற்கு அடுத்த நாளான 18-ம் தேதி முதலா கவே சபரிமலைக்கு பெண்கள் செல்ல லாம். அதேசமயத்தில், பெண்களையும் அனுமதிக்கும் போது, அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்கு மத்திய அரசு, திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு கூடுதலாக இரு நூறு ஏக்கரை வழங்க வேண்டும் எனவும் தேவசம்போர்டு தரப்பில் இருந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சபரிமலை கோயி லில் பெண்கள் எப்பொழுதிலிருந்து அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் கூறியதாவது:

உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகல் இன்னும் எங்களுக்கு வந்து சேரவில்லை. தீர்ப்பு உடனே அமலுக்கு வருகிறது என்று தான் நினைக்கிறேன். இந்த விவகாரம் தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் ஆலோசனை நடத்துவதற்காக சென்று கொண்டிருக்கிறேன். அதன் பிறகே, இதுகுறித்து என்னால் விளக்கமாகக் கூற முடியும். தீர்ப்பு உடனே அமலுக்கு வரும்பட்சத்தில், ஐப்பசியில் பெண்கள் வருவதற்கு தடை இருக்காது. சபரிமலை தீர்ப்பு தொடர்பாக வரும் 3-ம்தேதி தேவசம்போர்டு சார்பில் சபரிமலையில் கூட்டம் நடத்தி ஆலோ சிக்க உள்ளோம் என அவர் தெரி வித்தார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சபரிமலையில் பெண்களுக்கு மேற் கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. அடிப்படை வசதிகள் செய்த பின்னர், சபரிமலைக்கு அனுமதிப்பதா அல்லது நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும் விதத்தில் ஜப்பசியில் இருந்தே அனுமதிக்கப்படுமா என்பது வரும் 3ம் தேதியே உறுதியாகத் தெரியவரும்.

உஷாராகும் காவல்துறை!

உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து பத்தனம்திட்டா மாவட்ட போலீஸார் சில முக்கிய விஷயங் களை அரசுக்கும், கேரள மாநில காவல் துறை தலைவருக்கும் நேற்று அனுப்பி யுள்ளனர். அதில், “பெண்களையும் சபரிமலைக்கு அனுமதிக்கும்போது, சீசன் நேரங்களில் நாள் ஒன்றுக்கு 80 ஆயிரம் பக்தர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். நிலக்கல்லில் டிஜிட்டல் டிக்கெட் கவுண்டர் ஒன்று அமைக்க வேண்டும். பம்பை, சன்னிதானம், நிலக்கல் பகுதிகளில் கூடுதலாக பெண் போலீஸாரை பணியமர்த்த வேண்டும். கழிப்பறை, குளியலறை, தங்கும் விடுதி என பெண்களுக்கு பிரத்யேகமாக ஏராளமான வசதிகளை செய்ய வேண்டும்” எனக் கோரியுள்ளனர்.

போராட்ட களமாகும் சபரிமலை?

உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளியான தும் கடும் எதிர்ப்பினை பதிவு செய் திருந்தார் ராகுல் ஈஸ்வர். சபரிமலை தந்திரியாக இருந்த கண்டரரு மகேஸ்வரருவின் பேரனான இவர், கேரளம் முழுவதிலும் உள்ள ஐயப்ப பக்தர்களையும் போராட்டத்துக்கு அழைக்க உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

சபரிமலையில் பெண்கள் செல் வதற்கு முன் எப்போதும் தடை இருந் தது இல்லை. நான் கடந்த ஆண்டு என் தாயாருடன்தான் சபரிமலைக்கு சென்றேன். இங்கே பிரச்னை வயது மட்டுமே. அது விரத மண்டலத்தோடு தொடர்புடையது. ஆனால் அதை பாலின பாகுபாடு போன்று உணர்ந்து கொண்டுள்ளனர். மேற்குறிப்பிட்ட தீர்ப்புக்கு எதிராக ஐயப்ப தர்மசேனை உட்பட பல்வேறு ஐயப்ப பக்தர்களின் அமைப்புகள் சேர்ந்து சீராய்வு மனுவும் தாக்கல் செய்ய உள்ளோம்.

வரும் 16-ம்தேதி சபரிமலை விவகாரத்தை முன்வைத்து பெரிய அளவில் போராட்டம் நடத்த உள்ளோம். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் எப்படி துடிப்போடு நடந்து, வெற்றியை பெற்றுத் தந் ததோ, அதேபோல் துடிப்போடு இந்த போராட்டத்தையும் நடத்த உள்ளோம் என அவர் தெரிவித்தார். இதுதொடர்பான இவரது முகநூல் பதிவினை 16 ஆயிரம் பேர் பகிர்ந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x