Last Updated : 10 Sep, 2018 04:05 PM

 

Published : 10 Sep 2018 04:05 PM
Last Updated : 10 Sep 2018 04:05 PM

காங்கிரஸ் போராட்டம் நியாயமற்றது: சுப்பிரமணியன் சுவாமி தாக்கு

காங்கிரஸ் ஆட்சியின்போது எரிபொருள் விலை உயர்வுக்கு பொறுப்பற்ற காரணங்களையே சொன்னவர்கள் இன்று போராட்டம் நடத்துவதில் எந்தவித நியாயமுமில்லை என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்து டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராகக் குரல் எழுப்பிவருகின்றன. இன்றுஎதிர்க்கட்சிகள் பெட்ரோல் விலை உயர்வுக்கும் கலால் வரிக்கும் எதிர்ப்பு தெரிவித்து பாரத் பந்த்துக்கு அழைப்புவிடுத்துள்ள நிலையில் நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்ட சிலர் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி

பிரதமர் நரேந்திர மோடி உயரும் எரிபொருள்களின் விலையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பெட்ரோல் விலை உயரும்போதுஒட்டுமொத்த வாகனப் போக்குவரத்து முறைக்கும் கடும் பாதிப்பு ஏற்படும். பிரதமர் இப்பிரச்சினையில் தலையிட்டு பெட்ரோல் லிட்டர் விலை ரூ.40ஐ தாண்டாமல் பார்த்துக்கொள்ள பெட்ரோலியம் அமைச்சகத்துக்கு அறிவுரை வழங்க வேண்டும்.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்:

எதிர்க்கட்சிகள் திக்குத்தெரியாமல் விரக்தியடைந்த நிலையில் உள்ளன. கடவுள் அவர்களுக்கு உணர்த்துவார் என நான் நம்புகிறேன், அப்போது அவர்கள் பாசிட்டிவ் சிந்தனைக்கும் எதிர்மறை சிந்தனைக்கும் உள்ள வேறுபாட்டை உணர்வார்கள். இல்லையெனில், எதிர்காலத்தில், அவர்கள் கூட எதிர்க்கட்சி என்ற நிலையைக்கூட இழக்க நேரிடும்.

மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி:

பாரத் பந்த் தேவையில்லாத ஒன்று. புதுடெல்லியில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.80.73 டீசல் விலை லிட்டர் 72.83க்கு விற்கப்படுகிறது. அதேபோல மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 88.12 மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 77.32 விற்கப்படுகிறது. அவ்வளவுதான். ஆனால் நாடு தழுவிய அளவில் இந்தப் போராட்டம் நடைபெறுவதைக் காணமுடிகிறது.

இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி, யோகி ஆதித்யநாத், முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோர் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x