Published : 01 Jun 2019 11:27 AM
Last Updated : 01 Jun 2019 11:27 AM
மும்பை போரிவேலி பகுதியில் தெருவோரத்தில் இட்லி கடை வைத்திருக்கும் வியாபாரி ஒருவர் சமையலுக்கு கழிவறையில் உள்ள குழாயில் தண்ணீரைப் பிடித்துப் பயன்படுத்தும் வீடியோ ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
ஏற்கெனவே, ரயிலில் டீ விற்பவர்கள் கழிவறை நீரைப் பிடித்துப் புழங்கும் காட்சி வெளியாகி நடவடிக்கை பாய்ந்தது. இந்நிலையில், தற்போது இப்படி ஒரு வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.
45 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோ எங்கு எப்போது எடுக்கப்பட்டது என்பது பற்றி சரியான விவரம் இல்லை. இருந்தாலும் வீடியோ குறித்து உணவும் மற்றும் மருந்துகள் மேலாண்மை அமைப்பு விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
இவ்விவகாரம் தொடர்பாக உணவு மற்றும் மருந்துகள் அமைப்பின் மும்பை கிளை ஆய்வாளர் சைலேஷ் ஆதவ், "இந்த வீடியோ எங்கள் கவனத்துக்கு வந்தது. அதிர்ச்சியாக இருந்தது.
இது மக்களின் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் செயல். வீடியோவில் இருக்கும் நபர் யார் எனத் தேடி வருகிறோம். அந்த நபர் கிடைத்தவுடன் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். அவரிடம் உணவகம் நடந்த லைசன்ஸ் இருக்கிறதா என்பதை முதலில் பரிசோதிப்போம். தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றார்.
இந்த வீடியோவை சுனில்குமார் சிங் என்ற நபர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து மேற்கு ரயில்வே, மும்பை போலீஸ், மும்பை மாநகராட்சி, உணவு மற்றும் மருந்துகள் அமைப்பு ஆகியனவற்றை டேக் செய்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT