Published : 21 Jun 2019 12:00 AM
Last Updated : 21 Jun 2019 12:00 AM
ஆந்திர தலைநகரப் பகுதியில் உள்ள முன்னாள் முதல்வர் சந்திர பாபு நாயுடுவின் வீடு நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதால் அதை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளும் கட்சி எம்எல்ஏ கூறியுள்ளார்.
சந்திரபாபு நாயுடு கடந்த முறை முதல்வராக இருந்தபோது, குண்டூர் மாவட்டம், மங்களகிரி பகுதியில் உள்ள உண்டவல்லியில் (புதிய தலைநகரப் பகுதி) வசித்து வந்தார். தொழிலதிபர் ஒருவருக்கு சொந்தமான இந்த வீட்டை முந்தைய அரசு, முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்துக்காக குத்தகைக்கு எடுத்தது. பிறகு இந்த வீட்டையொட்டி அரசு சார்பில் ‘பிரஜா வேதிகா’ என்ற கூட்ட அரங்கம் கட்டப்பட்டது.
இந்நிலையில் சந்திரபாபு நாயுடு சில தினங்களுக்கு முன் இந்த வீடு மற்றும் கூட்ட அரங்கை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என மாநில அரசுக்கு கடிதம் எழுதினார். இதற்கு ஜெகன்மோகன் அரசு இதுவரை பதில் அளிக்கவில்லை.
இந்நிலையில், ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மங்களகிரி தொகுதி எம்எல்ஏ ராமகிருஷ்ணா ரெட்டி கூறும்போது, “சந்திரபாபு நாயுடு வசிக்கும் வீடு சுற்றுச்சூழல் விதிகளை மீறி ஆற்றுப் படுகையில் கட்டப்பட்டுள் ளது. அது சட்டவிரோத கட்டிடம் ஆகும். அந்த கட்டிடத்தில் இருந்து சந்திரபாபு நாயுடுவை வெளியேற்ற அரசு அனைத்து சட்டப்பூர்வ நட வடிக்கைகளும் எடுக்கும். அந்தப் பகுதியில் உள்ள சட்டவிரோத கட்டிடங்கள் அனைத்தும் இடிக்கப் படும் வரை சட்டப்போராட்டம் தொடரும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT