Published : 16 Jun 2019 12:00 AM
Last Updated : 16 Jun 2019 12:00 AM

இசட் பிளஸ் பாதுகாப்பு வாகனம் ரத்து; விமான நிலையத்தில் சந்திரபாபுவிடம் சோதனை: தெலுங்கு தேசம் கட்சியினர் கண்டனம்

ஆந்திர மாநிலத்தில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சியினரிடையே மறைமுக போர் தொடங்கி விட்டது.

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, அக்கட்சித்தலைவரும், முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டி, பல தரப்பட்ட மக்களை கவரும் வகையில் அதிரடி திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது. ஆனால், அதே சமயம் பழிவாங்கும் படலுமும் ஆந்திர மாநிலத்தில் தொடங்கி விட்டது என்றே கூறலாம்.

முன்னாள் முதல்வர்கள் என்.டி. ராமாராவ் பெயரிலும், சந்திரபாபு நாயுடுவின் பெயரிலும் இருந்த அரசு திட்ட பெயர்கள் அனைத்தும் நீக்கப்பட்டு விட்டன. மேலும், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு வழங்கி வந்த இசட் - பிளஸ் பாதுகாப்பிலும், முன்னால் செல்லும் பாதுகாப்பு வாகனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த பைலட் வாகனம் ரத்து செய்யப்பட்டதால், சந்திரபாபு நாயுடு முன்பை போன்று சாலைகளில் விரைந்து செல்வது சற்று கடினமாகி உள்ளது.

மேலும், நேற்று முன் தினம் இரவு, சந்திரபாபு நாயுடு, விஜயவாடா விமான நிலையத்தில் இருந்து, விமானம் மூலம் ஹைதராபாத் சென்றார். அப்போது, அவரை விமான நிலைய பாதுகாவலர்கள் வழக்கத்திற்கு மாறாக ஸ்கேன் செய்து பின்னர் அனுமதித்தனர். இத்தனை நாட்கள் நாயுடுவின் கார் சோதனையின்றி நேரடியாக விமான நிலையத்திற்குள் சென்றது.அவரை வழி அனுப்புவது வழக்கம். ஆனால், நேற்று முன் தினம் சந்திரபாபு நாயுடுவை சோதனை செய்த பிறகே பாதுகாப்பு வீரர்கள் அனுமதித்தனர்.

இந்த செயலால், தெலுங்கு தேசம் கட்சியினர் கொந்தளித்துள்ளனர். நாயுடுவுக்கு பாதுகாப்பு குறைத்ததினால் அவரது உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்றும், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, மத்திய அரசுக்கு சிபாரிசு செய்து இதுபோன்ற கீழ்த்தரமான அரசியல் செய்கிறார் என்றும் விமர்சித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x