Published : 26 Jun 2019 09:19 AM
Last Updated : 26 Jun 2019 09:19 AM
காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏற்க எவரும் முன்வராததால் அப்பதவியில் தானே தொடர ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார். தேர்தல் முடிவுகளுக்குப் பின் முற் றிலும் மாறியவர் பழைய நிலைக்கு திரும்பத் தொடங்கி உள்ளார்.
கடந்த மாதம் வெளியான மக் களவை தேர்தல் முடிவுகளின் போது காங்கிரஸுக்கு கிடைத்த படுதோல்வியால் தலைவர் பொறுப் பில் இருந்து விலகுவதாக ராகுல் காந்தி அறிவித்தார். இதை அக் கட்சியின் நிர்வாகிகள் ஏற்க மறுத்து அவரையே அப்பதவியில் தொடர வலியுறுத்தினர். இதற்கு செவிசாய்க்காத ராகுல் தனது ராஜினாமா நிலையில் உறுதியாக நின்றார். கட்சியின் முக்கிய நிர்வாகி களான அகமது படேல், கே.சி.வேணுகோபால் ஆகிய இருவரை தவிர அவர் யாரையும் சந் தித்து பேசவில்லை. இத்துடன் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான புதியவரை தேர்வு செய்யவும் அவர் முன்வரவில்லை.
இதனால், வேறுவழியின்றி ராகு லுக்கு மாற்றாக தலைவர் பதவிக்கு புதியவரை தேடிவந்தனர்.
மக்களவை தேர்தலில் தீவிர அரசியலில் இறக்கப்பட்ட ராகுலின் சகோதரி பிரியங்கா வதேரா பெய ரும் அதற்காக முன்வைக்கப்பட் டது. ஆனால், அவருக்கு காங் கிரஸின் மூத்த நிர்வாகிகள் இடையே எதிர்ப்பு கிளம்பியதாகக் கூறி அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. காங்கிரஸின் இரண்டாம்கட்ட தலைவர்களான ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ப,சிதம் பரம், மல்லிகார்ஜுன கார்கே உள் ளிட்ட சிலரது பெயர்கள் ஆலோசிக் கப்பட்டன.
எனினும், இவர்கள் இரண்டாம் கட்டத்துக்கு மேல் தலைவர் பதவிக்கு முன்னேறத் தயாராக இல்லை. இவ்வாறு, ஒரு முடிவும் ஏற்படாத நிலையில் மகாராஷ்டிரா, ஹரியாணா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தலும் நெருங்கி வருகிறது. 3 மாநில பேரவைத் தேர்தல் வரும் நிலையில் தலைவர் இல்லாமல் பொதுமக்கள் இடையே காங்கிரஸ் கட்சிக்கு களங்கம் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, வேறுவழியின்றி தலைவருக்கானப் பதவியில் தானே தொடர்வதாக ராகுல் முடிவு எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் காங்கிரஸின் மூத்த நிர்வாகிகள் வட்டாரங்கள் கூறும் போது, ‘தேர்தல் நடைபெறவுள்ள மூன்று மாநில கட்சி நிர்வாகிகளை அடுத்த சில நாட்களில் சந்தித்து தேர்தல் குறித்து ஆலோசிக்க ராகுல் ஒப்புக் கொண்டுள்ளார். மூத்த தலைவர்களையும் பழையபடி சந்தித்து பேசவும் அவர் தொடங்கி உள்ளார். தன் பதவியில் தொடர முடிவு செய்துள்ளவரின் எதிர்காலத் திட்டங்கள் கட்சியினருக்கு மிகவும் கடுமையானதாக அமைய உள் ளது. இந்த மாற்றத்தை நாம் ஏற் கெனவே எதிர்பார்த்து இருந்தோம்’ எனத் தெரிவித்தன.
இதற்காகவே, கட்சியின் தற் போதைய சூழலை பயன்படுத்தி கர்நாடகா மற்றும் உத்தரபிர தேச மாநிலங்களின் நிர்வாகக் குழுக்கள் அனைத்தும் கலைக்கப் பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது. மற்ற நேரமாக இருப்பின் கடும் எதிர்ப்பு வரும் என அஞ்சி மாநில நிர்வாகம் கலைக்கப்பட்டிருக்காது. இன்னும் சில தினங்களில் காங் கிரஸின் காரியக்கமிட்டிக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், தனது முடிவை மாற்றி ராகுலையே தலைவராக நீட்டிக்க கட்சியின் மூத்த தலைவர்கள் குரல் கொடுக் கத் திட்டமிட்டுள்ளனர். இதை ஏற்று தலைவர் பதவியில் ராகுல் தொடர வாய்ப்புள்ளது.இதன் மூலம், சுதந்திரத்துக்குப் பின் காந்தி குடும்பத்தினர் காங்கிரஸின் தலைவர்களாக தொடரும் நிலை யில் அதில் எந்த மாற்றமும் ஏற்படாது எனத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT