Last Updated : 02 Jun, 2019 12:00 AM

 

Published : 02 Jun 2019 12:00 AM
Last Updated : 02 Jun 2019 12:00 AM

காங்கிரஸ் அலுவலகம் எதிரே ரஃபேல் போர் விமான மாதிரி

டெல்லியில் அகில இந்திய காங் கிரஸ் கமிட்டி அலுவலகத்துக்கு எதிரே ரஃபேல் போர் விமானத்தின் மாதிரி நிறுவப்பட்டுள்ளது.

மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களின்போது ஆளும் கட்சிகள் மீது எதிர்க்கட்சிகள் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்து வது வழக்கம். இந்த முறை மக்களவைத் தேர்தலின்போது ரஃபேல் போர் விமானத்தை வாங் கியதில் ஊழல் நடைபெற்றதாக பிரதமர் நரேந்திர மோடி அரசு மீது காங்கிரஸ் புகார் கூறியது.

மக்களவைத் தேர்தலுக்கு முன் பாக, தன்னை நாட்டின் ‘சவுக்கிதார்' (காவலன்) என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதற்கு எதிராக ‘சவுக்கிதார் சோர் ஹை' (காவலன் ஒரு திருடன்) என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தீவிர பிரச்சாரம் செய்தார்.

இதுதொடர்பாக உச்ச நீதிமன் றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மக்களவைத் தேர்தல் முடிவில் பாஜக மற்றும் அதன் தலைமையிலான தேசிய ஜன நாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்துள் ளது. மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு 55 எம்பிக்கள் தேவை என்ற நிலையில் காங்கிர ஸுக்கு 52 எம்பிக்கள் மட்டும் கிடைத்துள்ளனர்.

இந்நிலையில், டெல்லியில் விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவாவின் அரசு குடியிருப்பின் முன் ரஃபேல் போர் விமானத்தின் மாதிரி நிறுவப்பட்டுள்ளது. இவரது குடியிருப்பு அக்பர் சாலையில் காங்கிரஸ் தலைமையகத்துக்கு எதிரில் அமைந்துள்ளது. இங் கிருந்து வெளியேறுபவர்கள் கண் களில்படும்படி ரஃபேல் போர் விமான மாதிரி நிறுவப்பட்டிருக் கிறது.

நாடு முழுவதிலும் உள்ள விமானப் படையின் முக்கிய அலுவலகங்கள் மற்றும் அதன் தலைமை பொறுப்பில் உள்ள அதிகாரிகள் வீடுகளின் முன் போர் விமானங்களின் மாதிரிகள் நிறுவப்படுவது வழக்கம். சில அதிகாரிகள் விமானங்களின் சிறிய வகை அச்சுகளை செய்து அலுவல கம் அல்லது வீட்டு மேசைகளின் மீது பெருமையுடன் வைக்கிறார்கள். இந்தவகையில், விமானப்படை தளபதி தனோவாவின் வீட்டின் முன் சுகோய் ரக விமானத்தின் மாதிரி இருந்தது. இருதினங்களுக்கு முன் இது மாற்றப்பட்டு ரஃபேல் போர் விமானத்தின் மாதிரி வைக்கப் பட்டிருக்கிறது.

ரஃபேல் போர் விமான ஒப் பந்தத்தில் மத்திய அரசு மீது காங்கிரஸ் பொய் புகாரை கூறியது என்பதை உணர்த்தும் வகையில் அந்த கட்சியின் தலைமையகம் எதிரே ரஃபேல் போர் விமானத்தின் மாதிரி அமைக்கப்பட்டிருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x