Published : 22 Jun 2019 07:21 AM
Last Updated : 22 Jun 2019 07:21 AM
தெலங்கானா மாநிலத்தின் 80 சதவீத மக்கள் பயன்பெறும் வகையிலான காலேஸ்வரம் அணை திட்டத்தை முதல்வர் சந்திரசேகர ராவ் 2 ஆண்டுகளுக்கு முன் தொடங்கி வைத்தார்.
ஜெயசங்கர் பூபால பள்ளி மாவட்டம், மேடிகட்டாவில் இத் திட்டப்பணி தொடங்கப்பட்டது. ஒருங்கிணைந்த ஆந்திரபிரதேசத் தின் முதல்வராக ஒய்.எஸ்.ராஜ சேகர ரெட்டி பதவி வகித்தபோது, இத்திட்டம் வேறு பெயரில் மேற் கொள்ளப்பட்டது. ஆனால் அதில் பல்வேறு சிக்கல்கள் இருந்தால், சந்திரசேகர ராவ் சில மாற்றங்களை செய்து ‘காலேஸ்வரம் திட்டம்’ என்ற பெயரில் மீண்டும் பணிகளை தொடங்கினார்.
ரூ.80 ஆயிரம் கோடி செலவி லான இத்திட்டம், தெலங்கானா உதயமான பிறகு தொடங்கப்பட்ட மிகப்பெரிய திட்டம் ஆகும். 85 மதகுகள் கொண்ட காலேஸ்வரம் அணையில் 16.37 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்கலாம். கோதாவரி ஆற்றில், 35 கி.மீ. தொலைவு வரை தண்ணீரை தேக்கலாம். இதிலிருந்து 40 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தி 11 ராட்சத மோட்டார்கள் மூலம் 2 டிஎம்சி தண்ணீர் வெளியேற்றும் விதமாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. எனவே ஆசியாவின் மிகப்பெரிய ஏற்று நீர் பாசன திட்டமாக இது கருதப்படுகிறது.
காலேஸ்வரம் அணையிலிருந்து 3 அணைகளுக்கு தண்ணீரை கொண்டு சென்று, அங்கிருந்து 20 நீர்த்தேக்கங்கள் மூலமாக மாநிலம் முழுவதும் தண்ணீர் விநியோகம் செய்யப்பட உள்ளது.
இத்திட்டம் மூலம் மாநிலம் முழுவதும் 37.8 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறவுள்ளது. இது தவிர ஹைதராபாத் உள்ளிட்ட 21 மாவட்டங்களின் தண்ணீர் தேவையும் பூர்த்தி செய்யப்பட உள்ளது. இந்த திட்டத்திற்காக 6,200 குடும்பத்தினர் வேறு இடங் களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். 20 ஆயிரம் தொழிலாளர்கள் இரவு பகலாக பணியாற்றியுள்ளனர். தற்போது ரூ.50 ஆயிரம் கோடி செலவிலான பணிகள் நிறைவடைந்துள்ளன என முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்தார்.
காலேஸ்வரம் அணையிலிருந்து முதல் ஆறு மதகுகளை முதல்வர் சந்திரசேகர ராவ் நேற்று திறந்துவைத்து தண்ணீரை வெளியேற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மாநில ஆளுநர் நரசிம்மன், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் கலந்துகொண்ட னர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT