Published : 13 Mar 2018 09:25 PM
Last Updated : 13 Mar 2018 09:25 PM
வைர வியாபாரிகள் நிரவ் மோடி, மெகுல் சோக்சி விவகாரத்தில் மேலும் கூடுதலாக ரூ.942 கோடி மோசடி நடந்துள்ளதாக பஞ்சாப் நேஷனல் வங்கி போலீஸாரிடம் தெரிவித்தள்ளது.
வைர வியாபாரியும் தொழிலதிபருமான நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.12 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடி செய்த விவகாரம் நாடுமுழுவதும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. வங்கித்துறை வரலாற்றில் மிகப்பெரிய மோசடியாக இது பார்க்கப்படுகிறது.
இந்த மோசடிக்கு வங்கியில் பணியாற்றும் ஊழியர்கள் துணையுடன் நடந்துள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்து, பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நீதிமன்றத்தில் போலீஸார் இன்று தாக்கல் செய்த மனுவில், கீதாஞ்சலி குழுமத்தின் நிறுவனம் மெகுல் சோக்சி ரூ. 708 கோடி மோசடி செய்துள்ளது. இதற்கு முன் அந்த நிறுவனம் ரூ.6,138 கோடியும் ஏமாற்றியுள்ளது. இதனால், பஞ்சாப் நேஷனல் வங்கியில் கூடுதலாக ரூ.942 கோடி மோசடி நடந்துள்ளது. இதையடுத்து, ஒட்டுமொத்தமாக பஞ்சாப் வங்கியின் மோசடியின் அளவு ரூ12 ஆயிரத்து 949 கோடியாக உயர்ந்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.
இது குறித்து கீதாஞ்சலி குழுமத்தின் வழக்கறிஞரிடம் நிருபர்கள் கேட்டபோது, இந்த புதிய குற்றச்சாட்டு குறித்து அதிகாரபூர்வமாக ஏதும் தெரியாததால், கருத்து தெரிவிக்க முடியாது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT