Published : 13 Mar 2018 09:33 AM
Last Updated : 13 Mar 2018 09:33 AM
தெலங்கானா சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. ஆளுநர் நரசிம்மன் உரையாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். அவர்களை பாதுகாவலர்கள் வெளியேற்ற முயற்சித்தனர். காங்கிரஸ் எம்எல்ஏ. கோமிட்டி ரெட்டி வெங்கட்ரெட்டி, ஆளுநரை நோக்கி மைக்கை வீசினார். அதில் இருந்த ஹெட் போன் மேலவை தலைவர் சுவாமி கவுடுவின் கண்ணில் பட்டது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் மதுசூதனாச்சாரி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT