Published : 30 Sep 2014 10:19 AM
Last Updated : 30 Sep 2014 10:19 AM
உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் விவகாரத்தில் மாநில அரசின் ஆலோசனையின்படி ஆளுநர் செயல்பட வேண்டும்.
இதை தேசிய நீதித்துறை நியமன ஆணைய மசோதாவில் தெளிவாக குறிப்பிட வேண்டும் என்று மேற்கு வங்க ஆளுநர் மம்தா பானர்ஜி, மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை ‘கொலீ ஜியம்’ என்று அழைக்கப்படும் நீதிபதிகள் அடங்கிய குழு நியமித்து வந்தது. இதை மாற்றி அரசுக்கும் பங்கு இருக்கும் வகையில் தேசிய நீதித்துறை நியமன ஆணைய மசோதாவும், அது தொடர்பான அரசியல் சாசன சட்டத்திருத்தமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டன.
இந்நிலையில், அனைத்து மாநில முதல்வர்களுக்கும், மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எழுதியுள்ள கடிதத்தில், “நீதித்துறை நியமன ஆணைய மசோதா தொடர்பான அரசியல் சாசன சட்டத்திருத்தத்துக்கு மாநில சட்டமன்றத்தில் ஒப்புதல் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் பிறகுதான், அந்த சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர முடியும்” என்று தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக மத்திய சட்டத் துறை அமைச்சகத்துக்கு மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி எழுதியுள்ள கடிதத்தில், “மசோதாவின் பிரிவு 6(7)-ல் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியையும், நீதிபதிகளையும் நியமிக்கும் முன்பு சம்பந்தப்பட்ட மாநிலத்தின் ஆளுநர், முதல்வரின் கருத்துகளை கேட்ட பின்பே ஆணையம் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை, மாநில அரசின் ஆலோசனையின் படிதான் நீதிபதியின் பெயரை ஆளுநர் பரிந்துரைக்க வேண்டும் என்று மாற்ற வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இது தொடர்பாக மத்திய சட்டத் துறை அமைச்சக அதிகாரி கள் கூறும்போது, “நாட்டின் அரசியல் சாசன சட்டத்தின்படி ஆளுநரின் பணி தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. முதல் வர் தலைமையிலான மாநில அமைச் சரவையின் ஆலோசனையின்படி தான் ஆளுநர் முடிவுகளை எடுக்க வேண்டும் என்ற அரசியல் சாசன சட்டத்தை சுட்டிக்காட்டி மம்தா பானர்ஜிக்கு விரைவில் கடிதம் எழுத வுள்ளோம்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT