Last Updated : 17 Mar, 2018 09:26 PM

 

Published : 17 Mar 2018 09:26 PM
Last Updated : 17 Mar 2018 09:26 PM

பஞ்சாப் முன்னாள் முதல்வர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு தாராவுக்கு ஆயுள் சிறை

 கடந்த 23 ஆண்டுகளக்கு முன், பஞ்சாப் முன்னாள் முதல்வர் பீன்ட் சிங்கை கொலை செய்த வழக்கில் 43 வயது ஜக்தர் சிங் தாராவுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் பீன்ட் சிங். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். கடந்த 1995-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31-ம்தேதி பீன்ட் சிங் தலைமைச் செயலகத்துக்கு செல்லும்போது, அவரின் பாதுகாவலர் தில்பர் சிங் மனிதவெடிகுண்டாக மாறி கொலை செய்தார். இதில் 17 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த வழக்கு சண்டிகர் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் 15 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு, 6 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். இந்த கொலை வழக்கில் மூளையாகச் செயல்பட்ட ஜக்தர் சிங் ஹவாரா, ரஜூனா, பரம்ஜீத் சிங், லக்விந்தர் சிங், பல்வந்த் சிங் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இதற்கிடையே கடந்த 2004-ம் ஆண்டு பாதுகாப்பு மிகுந்த புரெயில் சிறையில் இருந்து ஜக்தர் சிங் தாரா தப்பி ஓடினார். நீண்டகாலமாக தேடப்பட்ட நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு, தாய்லாந்து போலீஸாரால் தாரா கைது செய்யப்பட்டார். அங்கிருந்து இந்தியா அழைத்து வரப்பட்ட தாரா மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் சிறப்பு கூடுதல் செசன்ஸ் நீதிபதி ஜே.எஸ்.சித்து இன்று புரெயில் சிறைக்கே சென்று தீர்ப்பளித்தார். இதில் ஜக்தர் சிங் தாரா மீது கொலை, குற்றச்சதி, ஆயுத தடுப்புச்சட்டம் ஆகிய பிரிவின் கீழ் ஆயுள்தண்டனையும், ரூ.35 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x