Published : 10 Mar 2018 10:04 AM
Last Updated : 10 Mar 2018 10:04 AM
குணப்படுத்த முடியாத நிலைக்குச் சென்றுவிட்ட நோயாளிகளை அவர் கள் சம்மதத்துடன் கருணைக் கொலை செய்வதற்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பளித் துள்ளது.
குணப்படுத்த முடியாத, கோமா நிலைக்குச் சென்றுவிட்ட நோயாளிகளை கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக் கை நீண்டகாலமாக இருந்து வருகிறது. இதுதொடர்பான வழக்குகளில் நீதிமன்றங்கள் மாறுபட்ட தீர்ப்புகளை அளித்திருந்தன. இந்நிலையில், கருணைக் கொலைக்கு அனுமதி அளிக்கக் கோரி ‘காமன் காஸ்’ அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தொடரப் பட்டிருந்தது.
இம்மனுவில், இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 21-ன் படி ஒவ்வொரு மனிதரும் கவுரவமாக உயிரிழக்க அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மத்திய அரசு சார்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இப்பிரிவின்படி கவுரவமாக வாழும் உரிமை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. கருணைக் கொலைக்கு அனுமதி அளித்தால் இந்த அனுமதி தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது என்று வாதிடப்பட்டது. கருணைக் கொலை தொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் வாதிடப்பட்டது.
இருதரப்பையும் கேட்டறிந்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.கே.மிஸ்ரா, ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷன் ஆகியோர் 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு நேற்று தீர்ப்பளித்தது. தீர்ப்பில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சம் வருமாறு:
ஒருவர் கவுரவமாக உயிரிழப்பதும் அடிப்படை உரிமைகளில் ஒன்று தான். எனவே, உயிர் சாசனம் (லிவிங் வில்) மற்றும் ‘பாசிவ் யூதனேசியா’ எனப்படும் கருணைக் கொலை ஆகியவை சட்டப்படி செல்லும். குணப்படுத்த முடியாத நிலைக்குச் சென்று விட்டவர்கள் மற்றும் கோமா நிலைக்குச் சென்றுவிட்டவர்கள் கவுரவமாக தங்கள் உயிரை முடித்துக் கொள்வதும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாழும் உரிமையில் அடங்கும்.
குணப்படுத்த முடியாத நிலைக்குச் சென்று விட்டவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள உயிர் சாசனம் எனப்படும் முன்அனுமதி அளிக்கலாம். முடிவெடுக்க முடியாத கோமா நிலைக்குச் சென்றவர்களாக இருந் தால் அவர்களது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் இந்த முடிவை எடுக்கலாம். இந்த முடிவு அதற்கென அமைக்கப்படும் மருத்துவக் குழு வால் அங்கீகரிக்கப்பட வேண்டும். அதன்பிறகே கருணைக் கொலைக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும். இந்த நடைமுறை மத்திய அரசு புதிய சட்டம் இயற்றும்வரை அமலில் இருக்கும்.
இந்த விஷயத்தில் நீதிபதிகள் மத்தியில் 4 விதமான கருத்துகள் இருந்தாலும், கருணைக் கொலைக்கு அனுமதி அளிக்கலாம் என்பதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டதன் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப் படுகிறது.
இவ்வாறு உச்ச நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
முந்தைய வழக்குகளின் விவரம்
இதேபோன்ற வழக்குகள் ஏற்கனவே நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
‘பி.ரத்தினம் எதிர் மத்திய அரசு’ வழக்கில் இந்திய அரசிலமைப்புச் சட்டப்பிரிவு 21-ல் வழங்கப்பட்டுள்ள வாழும் உரிமையின் கீழ், சாகும் உரிமையும் உண்டு என்று தீர்ப்பளிக்கப் பட்டது.
‘அருணா ராமச்சந்திர ஷான்பாக் எதிர் மத்திய அரசு’ வழக்கில் கருணைக் கொலைக்கு சில நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கலாம் என்று உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவு பிறப்பித்திருந்தது.
‘கியான் கவுர் எதிர் பஞ்சாப் அரசு’ வழக்கில், தற்கொலை மற்றும் கருணைக் கொலை இரண்டுக்கும் இந்திய சட்டத்தில் அனுமதி இல்லை என்று 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக் கது.
அரசு டாக்டர் ஏ.ராமலிங்கம் கூறிய தாவது:
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இதனை அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்றுக் கொள்வார்களா என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. டாக்டர் எப்படியாவது நோயாளியின் உயிரை காப்பாற்றதான் முயற்சி செய்வார். நோயாளி இறப்பதற்கு எத்தனை உறவினர்கள் சம்மதம் தெரிவிப்பார்கள். சரியான புரிதல் இல்லாததால் டாக்டர்களுக்கும், நோயாளிகளின் உறவினர்களும் மோதல் உருவாக வாய்ப்புள்ளது. நாடு முழுவதும் மக்களின் கருத்துகளை கேட்டு முடிவு செய்ய வேண்டும்.
அரசு டாக்டர் கே.செந்தில் கூறிய தாவது:
ஒரு டாக்டர் என்ற முறையில் நோயாளியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும். அதேநேரத்தில் மூளைச்சாவு, உறுப்புகள் செயலிழத்தல் போன்றவைகள் ஏற்படும் போது நோயாளியின் வலி, அவருடைய குடும்பத்தினரின் சூழ்நி லையை கருத்தில் கொள்ள வேண்டும். கருக்கலைப்பு செய்வதற்கு சட்டம் அனுமதித்துள்ளது. அதனால் கருணை கொலைக்கான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏற்கத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT