Published : 09 Mar 2018 06:26 PM
Last Updated : 09 Mar 2018 06:26 PM
12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றும் மசோதா ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையில் இன்று நிறைவேறியது.
ஏற்கனவே, ஹரியானா, மத்தியப் பிரதேச அரசுகள் அரசு தூக்குதண்டனை விதிக்கும் சட்டத்தை இயற்றி உள்ள நிலையில், இப்போது ராஜஸ்தான் அரசும் சட்டம் கொண்டு வந்துள்ளது.
மேலும், மஹாராஷ்டிரா, கர்நாடக மாநிலங்களும் இதேபோன்று சட்டம் இயற்ற ஆலோசனை நடத்தி வருகின்றன.
ராஜஸ்தான் சட்டப்பேரவையில் கடந்த புதன்கிழமை கிரிமினல் சட்டத் திருத்த மசோதா 2018 கொண்டுவரப்பட்டது. இந்த மசோதாவில் கூறியிருப்பதாவது, ‘ 12 வயது வரை உள்ள சிறுமிகள், முதல் பெண்கள் வரை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை அளிக்கலாம் அல்லது குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்க வேண்டும். அல்லது சிறை தண்டனையை வாழ்நாள் முழுவதும் நீட்டித்து இருக்க வேண்டும்’ என்று கொண்டுவரப்பட்டது.
மேலும், 376 டிடி எனும் பிரிவு கூடுதலாகச் சேர்க்கப்பட்டது.அதில், ஒரு பெண்ணை, சிறுமியை கூட்டுப்பலாத்காரம் செய்பவர்களுக்கும் இதேபோன்று தூக்கு தண்டனை, அல்லது 14 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கலாம். கூட்டு பலாத்காரத்தில் ஈடுபடும் குற்றவாளிகளை வாழ்நாள் முடியும்வரை சிறையில் அடைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த மசோதா ராஜஸ்தான் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டு வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து விரைவில் ஆளுநருக்கும், குடியரசு தலைவருக்கும் அனுப்பப்பட்டு சட்டமாகும்.
இது குறித்து ராஜஸ்தான் மாநில உள்துறை அமைச்சர் ஜிசி கட்டாரியா ஜெய்பூரில் இன்று நிருபர்களிடம் கூறுகையில், ‘ ராஜஸ்தான் மாநில குற்றவியல் சட்டத்தில் இரு திருத்தங்கள் கொண்டு வந்துள்ளோம். அதில் 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை விதிப்பது, மற்றொரு 14 ஆண்டுகள் கண்டிப்பாக சிறையில் இருந்தாலும், அவர் வாழ்நாள்வரை வெளி உலகத்துக்கு வராமல் சிறையிலேயே காலத்தை கழிக்க வேண்டும் என்பதாகும் இந்த திருத்தத்துக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது’ என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT