Published : 14 Mar 2018 09:37 AM
Last Updated : 14 Mar 2018 09:37 AM

இந்திய வரைபடத்தில் ஆந்திரா இல்லையா ?: மத்திய அரசுக்கு சந்திரபாபு நாயுடு கேள்வி

இந்திய வரைபடத்தில் ஆந்திர மாநிலம் இல்லையா ? என அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

அமராவதியில் உள்ள சட்ட மேலவையில் ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்வர் சந்திரபாபு நாயுடு பங்கேற்று பேசியதாவது:

ஆந்திர மாநில பிரிவினை சட்டத்தில் உள்ள அம்சங்களை மட்டுமே அமல்படுத்துமாறு மத்திய அரசை வலியுறுத்தினோம். ஆனால் அதிலும் மத்திய அரசு தனது அலட்சியப் போக்கைக் காட்டுவது சரியல்ல. மாநிலப் பிரிவினையால் பெரும் நஷ்டம் அடைந்துள்ள ஆந்திர மாநிலத்துக்கு உதவ வேண்டிய மத்திய அரசு, கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற தயங்குவது ஏன்? போலீஸ் அகாடமி ஆகியவற்றை ஆந்திராவில் நிறுவாமல் இருப்பதன் பின்னணி என்ன?

ஆந்திரா இந்திய வரை படத்தில் இல்லையா? அல்லது ஆந்திரா இந்தியாவிலேயே இல்லையா? மாநில சிறப்பு அந்தஸ்து விஷயத்தில் அனைத்து கட்சிகளும் ஒரே நிலை வகிக்கின்றன. ஆனால், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்பி விஜயசாய் ரெட்டி மட்டும், சிறப்பு அந்தஸ்து வழங்குவது என்பது பாஜகவால் மட்டுமே சாத்தியம் என்கிறார். இவர் இப்படி சொல்லும்போது, ஒருபுறம் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம் என்றும் கூறுகிறது. எதை நம்புவது? மாநில சிறப்பு அந்தஸ்து எங்களது உரிமை. அதை எக்காரணத்தைக் கொண்டும் விட்டுக்கொடுக்க மாட்டோம். இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x