Published : 03 Mar 2018 02:54 PM
Last Updated : 03 Mar 2018 02:54 PM
கேரள மாநிலம், கொச்சியில் கல்லூரி மாணவர் ஒருவர் தேசிய கீதத்தை கிண்டல் செய்து பேசியதையடுத்து, அந்த மாணவர் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
கொச்சி மாவட்டம், மூவாற்றுப்புழா பகுதியில் நிர்மலா கல்லூரி செயல்பட்டுவருகிறது. இந்த கல்லூரியில் படிக்கும் அஸ்லாம் சலீம் என்ற மாணவர் பிஏ வரலாறு மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்திய மாணவர் அமைப்பிலும் உறுப்பினராக உள்ளார்.
இந்நிலையில், கடந்த மாதம் 27-ம் தேதி வகுப்பில் அஸ்லாம் சலீம், வகுப்பில் தேசிய கீதத்தை கிண்டல் செய்யும் விதத்தில் பாடியும்,நடனமாடியுள்ளார். இதை தனது நண்பர்கள் மூலம் புகைப்படமும், வீடியோவும் எடுத்துள்ளார்.
இது குறித்து கல்லூரியின் பேராசிரியர்கள் சலீமின் நடவடிக்கை குறித்து கல்லூரி முதல்வரிடம் புகார் செய்தனர் தேசிய கீதத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டார் என்றும், மற்ற மாணவர்களையும் தூண்டிவிடும் வகையில் பேசியுள்ளார் என்றும் புகார் செய்தனர். இதையடுத்து, சலீமை இடைநீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று கல்லூரியின் துணை முதல்வர் ஜோஸ் கரிகுன்னல் தெரிவித்தார்.
மேலும், காங்கிரஸ் ஆதரவுடன் செயல்படும் கேரள மாணவர் யூனியன், சலீம் நடவடிக்கை குறித்தும், அவரின் பேச்சு, வீடியோ குறித்து போலீஸில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT