Published : 22 Mar 2018 08:47 AM
Last Updated : 22 Mar 2018 08:47 AM
தெலங்கானா மாநிலத்தில் குப்பையில் கிடந்த ஒரு லட்ச ரூபாயை பத்திரமாக எடுத்து வைத்து, அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தார் பெண் துப்புரவு தொழிலாளி ஒருவர்.
ஜகத்யாலா மாவட்டம், மேடபல்லி காய்கறி மார்க்கெட்டில் துப்புரவு தொழிலாளி லட்சுமி நேற்று காலையில் வழக்கம்போல சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது ஒரு கவரில் ஒரு லட்ச ரூபாய் இருந்தது தெரியவந்தது. உடனே அதை எடுத்து பத்திரப்படுத்தினார். இந்நிலையில், அந்த மார்க்கெட்டில் சிக்கன் கடை வைத்திருக்கும் ஜாவித் என்பவர் எதையோ தேடிக்கொண்டிருந்தார். இதைக் கண்டு அக்கம்பக்கத்து கடைக்காரர்களும் விசாரித்துக் கொண்டிருந்தனர். அங்கு துப்புரவு தொழிலாளி லட்சுமியும் சென்று விசாரித்தார். குப்பை பைக்கு பதிலாக தனியாக பிளாஸ்டிக் பையில் வைத்திருந்த ஒரு லட்ச ரூபாயை குப்பையில் வீசி விட்டதாக ஜாவித் தெரிவித்தார்.
இதை அறிந்த துப்புரவு தொழிலாளி லட்சுமி, தான் பத்திரமாக எடுத்து வைத்திருந்த ஒரு லட்ச ரூபாயை சிக்கன் கடைக்காரர் ஜாவித்திடம் வழங்கினார். அவரது நேர்மையை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர். இதையடுத்து லட்சுமியின் நேர்மையைப் பாராட்டிய ஜாவித், ரூ.5 ஆயிரத்தை சன்மானமாக வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT