Published : 25 May 2019 04:08 PM
Last Updated : 25 May 2019 04:08 PM
கரண்டி, கத்தி, டூத் ப்ரஷ், ஸ்க்ரூ ட்ரைவர், கத்தி.. இவையெல்லாம் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்தவரின் வயிற்றிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட பொருட்கள்.
இமாச்சலப் பிரதேசத்தின் மாண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கர்ண சேனா. இவருக்கு சற்று மனநல பாதிப்பு இருக்கிறது. இந்நிலையில் இவர் லால் பகதூர் சாஸ்திரி அரசு மருத்துவமனையில் வயிற்றுக் கோளாறுக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
உடனே அவருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது.
அதில், அவரது வயிற்றில் எவர் சில்வர் கரண்டிகள், கத்தி, டூத் ப்ரஷ், ஸ்க்ரூ டிரைவர் போன்ற பொருட்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 4 மணி நேரம் போராடி மருத்துவக் குழு இந்தப் பொருட்களை வயிற்றுக்கு சேதமில்லாமல் அப்புறப்படுத்தியுள்ளது.
இது குறித்து மருத்துவக் குழு தலைவர் நிகில் கூறும்போது, "இந்த நோயாளிக்கு மன நோய் இருக்கிறது. அதன் காரணமாகவே இத்தகைய பொருட்களை உட்கொண்டிருக்கிறார். சாதாரண நபர்களால் இத்தகைய பொருட்களை சாப்பிட முடியாது" என்றார்.
சிகிச்சை முடிந்து அபாயக் கட்டத்தைத் தாண்டிய அந்த நபர் தற்போது மருத்துவர்கள் கண்காணிப்பில் உடல் நலன் தேறி வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT