Published : 18 Sep 2014 09:58 AM
Last Updated : 18 Sep 2014 09:58 AM
பாஸ்போர்ட் முடக்கத்தை எதிர்த்து வழக்கு தொடர்வது குறித்து, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர் சுப.உதயகுமார் ஆலோசித்து வருவதாக தெரிகிறது.
சுப.உதயகுமார் நேற்று முன்தினம் டெல்லி விமான நிலையத்தில் இருந்து நேபாளம் செல்ல முயன்றார். அப்போது அவர் மீது 300 வழக்குகள் இருப்பதை அறிந்து, அவரை விமான நிலைய அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
பின்னர், திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி.யிடம் தொடர்புகொண்டு உதயகுமார் மீதான வழக்குகள் பற்றியும், அவரை தொடர்ந்து பயணிக்க அனுமதிப்பது குறித்தும் கேட்டனர்.
எஸ்.பி தனது முடிவை தெரிவிக்காததால், உதயகுமாரிடம் விசாரணை நடத்திவிட்டு பின்னர் அவரை அனுப்பிவிட்டனர். ஐந்தரை மணி நேரம் விமான நிலையத்தில் உதயகுமார் அமர வைக்கப்பட்டார். ஆனால், கைது செய்யப்படவில்லை.
மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில், குடியுரிமை அதிகாரிகள் உதயகுமார் மீது எந்த வழக்கும் பதியாமல் அனுப்பிவிட்டனர் என்று தெரிய வருகிறது.
‘தி இந்து’ தரப்பில் கேட்ட போது உதயகுமார் கூறியதாவது:
வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறி, என் பாஸ்போர்ட்டை முடக்கி வைத் துள்ளனர்.
என் மீது வழக்கை நடத்தி தண்டனை வழங்குங்கள். அல்லது என் பாஸ்போர்ட்டை திருப்பிக் கொடுங்கள் என்று கேட்டு வழக்கு தொடரப் போகிறேன். வழக்கை உச்சநீதிமன்றத்தில் தொடருவதா, உயர்நீதிமன்றத்தில் தொடருவதா என்பது குறித்து வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT