Published : 31 May 2019 10:47 AM
Last Updated : 31 May 2019 10:47 AM
மத்திய அரசின் நேற்றைய பதவியேற்பு விழாவில் இரண்டு அமைச்சர்கள் கடவுளின் பெயரால் பதவிப் பிரமாணம் எடுக்காமல் மனசாட்சியின்படி பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
பிரதமர் மோடியுடன் 58 பேர் அமைச்சர்களாக நேற்று பதவியேற்றனர். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் சுமார் 6000 விருந்தினர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு அரசுகளின் தலைவர்கள், தொழிலதிபர்கள், பாலிவுட் பிரபலங்கள், தூதரகப் பிரதிநிதிகள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
பிரதமர் மோடியுடன் சேர்த்து 55 பேர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். பலரும் இந்தி மொழியில் கடவுளின் சாட்சியாக பிரமாணம் செய்துகொள்ளாமல் மனசாட்சியின்படி பிரமாணம் செய்து கொண்டனர்.
லோக்ஜன சக்தி கட்சியின் ராம்விலாஸ் பாஸ்வான் மற்றும் பாஜகவின் இந்தர்ஜித் சிங் ஆகியோர் இவ்வாறு பதவியேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT