Last Updated : 10 May, 2019 03:10 PM

 

Published : 10 May 2019 03:10 PM
Last Updated : 10 May 2019 03:10 PM

காங்கிரஸால் 55 ஆண்டுகளில் செய்ய முடியாததை மோடி 5 ஆண்டுகளில் செய்து முடித்துள்ளார்: யோகி ஆதித்யநாத்

காங்கிரஸ் கட்சியால் கடந்த 55 ஆண்டுகளில் நாட்டுக்குச் செய்ய இயலாத நன்மைகளை மோடி வெறும் 5 ஆண்டுகளிலேயே செய்து முடித்துள்ளார் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் சித்தார்த் நகர் பகுதியில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய ஆதித்யநாத், "மூத்த குடிமக்கள், ஏழை விதவைகளுக்கான ஓய்வூதியமாக இருக்கட்டும். கடன் ரத்தாக இருக்கட்டும். ஏழை மக்களுக்கு வீட்டு வசதி செய்து தருவதாக இருக்கட்டும், மின்சார வசதி, எரிவாயு சிலிண்டர் வசதி என ஏழை மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி செயல்படுத்தியிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியால் கடந்த 55 ஆண்டுகளாக செய்ய இயலாததை பிரதமர் மோடி வெறும் 5 ஆண்டுகளில் செய்து முடித்திருக்கிறார்.

உலக அரங்கில் இந்தியாவின் புகழ் ஓங்குவதை விரும்பாதவர்கள்தான் மோடியை எதிர்க்கிறார்கள்.

உத்தரப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் - ராஷ்ட்ரீய ஜனதாதள கூட்டணி மே 23 வரை மட்டுமே நீடிக்கும். தேர்தல் முடிவு வெளியான பின்னர் தோல்விக்கு மாயாவதியும் அகிலேஷ் யாதவும் மாறி மாறி குற்றஞ்சாட்டிக் கொண்டிருப்பார்கள்.

உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர், விவசாயக் கடன்கள் ரத்து செய்யப்பட்டது. இங்கு கட்டப்பட்டுள்ள மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், நெடுஞ்சாலைகள் அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கு சாட்சி.

எங்களது அன்னையரையும் சகோதரிகளையும் காக்க ஆன்டி ரோமியோ குழு அமைத்தோம். சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களைக் கைப்பற்றினோம்.

அந்த இடங்களில் அரசுப் பள்ளிகள்,  பாலிடெக்னிக் கல்லூரிகள் அமைத்துள்ளோம். உபரி நிலங்கள் ஏழைகளின் மறுவாழ்வுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது" எனப் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x