Last Updated : 22 May, 2019 03:04 PM

 

Published : 22 May 2019 03:04 PM
Last Updated : 22 May 2019 03:04 PM

மூழ்கும் கப்பலில் இருக்கைகளை எங்கே வைத்தால்தான் என்ன?- பாஜகவை கிண்டலடித்த சசி தரூர்

மூழ்கும் கப்பலில் இருக்கைகளை எங்கே வைத்தால்தான் என்ன? என பாஜகவை கிண்டலடித்துள்ளார் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. நாளை மே 23 வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கிறது.  மக்களவைத் தேர்தல் கருத்து கணிப்புகள் பெரும்பாலனவை மீண்டும் மோடி ஆட்சியே அமையும் எனத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சசி தரூரிடம் தேர்தல் முடிவுக்கு முன்னரே பாஜக முன்னெடுக்கும் கொண்டாட்டங்கள் குறித்து கேள்வி எழுப்ப்பட்டது.

அதற்கு அவர், "அவர்கள் என்ன மாதிரியான கொண்டாட்டத்தில் வேண்டுமானாலும் ஈடுபடட்டும். ஆனால் இறுதி முடிவு வாக்காளர்கள் கைகளில்தான் உள்ளது. வாக்காளர்களின் விருப்பம் என்னவென்பது நாளை நமக்குத் தெரிந்துவிடும். பாஜக ஒரு மூழ்கும் கப்பல். அந்த கப்பலில் இருக்கைகளை எங்கே வைத்தால்தான் என்ன?

நான் கருத்து கணிப்புகளை நம்புவதில்லை. இதற்கு முன்னரும் பலமுறை கருத்துக் கணிப்புகள் பொய்த்துள்ளன. 2004 கருத்து கணிப்புகள் வாஜ்பாய் வெற்றி பெறுவார் என்றன. ஆனால் என்ன நடந்தது?

முடிவு என்னவாக இருந்தாலும் இப்போது கருத்து கணிப்புகளில் சொல்லப்படும் அளவுக்கு சீட்களை நிச்சயமாக பாஜக பெறாது.

கருத்துக் கணிப்புகள் எப்போதுமே ஒரு சார்பாகவே இருப்பது இயல்பு. மக்களிடம் யாராவது சென்று கருத்துக் கணிப்பு என கேள்வி கேட்டால் அவர்கள் ஆளுங்கட்சி ஆட்களோ எனப் பயந்து மக்கள் ஆளுங்கட்சிக்கு வாக்களித்ததாகத் தான் சொல்வார்கள். ஆனால் உண்மையிலேயே அவர்கள் வேறு கட்சிக்குக் கூட வாக்களித்திருக்கலாம்.

திருவனந்தபுரம் தொகுதியில் நான் மீண்டும் வெற்றி பெறுவது உறுதி" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x