Published : 17 May 2019 05:16 PM
Last Updated : 17 May 2019 05:16 PM
சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரான ராம் கோவிந்த் சவுத்ரி, பிரதமர் மோடிடை ராவணனோடு ஒப்பிட்டுப் பேசி சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ராம் கோவிந்த், "ராமர் கோயில் எங்களுக்கெல்லாம் வழிப்பாட்டுத்தலம். ஆனால், பாஜகவுக்கு அது வாக்குகளை குவிப்பதற்கான ஒரு விவாத தலைப்பு.
பிரதமர் மோடி ராவணன் போல் ஆகிவிட்டார். ராவணன் கடவுளரையும், பெண் தெய்வங்களையும் கடத்திச் சென்றார். பிரதமர் மோடி சிபிஐ, அமலாக்கத்துறை, ரிசர்வ் வங்கி போன்ற அமைப்புகளை கடத்தி தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்" என்றார்.
பிரதமரை ராவணனோடு ஒப்பிட்டு பேசியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இதற்கிடையில், மேற்குவங்கத்தில் நடந்த கலவரத்தைப் பற்றி பேசும்போது, திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி அங்கு பலமான சக்தியாக இருப்பதால், பாஜக கொல்கத்தா தெருக்களில் வன்முறையை கட்டவிழ்த்து தனது பலத்தை நிரூபிக்க முயன்றது" எனக் கூறினார் ராம் கோவிந்த் சவுத்ரி.
உத்தரப் பிரதேசத்தில் நாளை கடைசி கட்ட தேர்தலின்போது 13 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT