Published : 03 May 2019 05:20 PM
Last Updated : 03 May 2019 05:20 PM
ஆம் ஆம்தி கட்சி சார்பில் உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் மக்களவைத் தொகுதியில் போட்டியிடவுள்ளார் பவானிநாத் வால்மீகி.
சமூக ஆர்வலரான பவானி, டெல்லியில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் நடுவராக பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்துள்ள பவானி, "நான் அரசியலில் இணைய வேண்டும் என விரும்பியபோது நிறைய கட்சிகளுடன் பேசினேன். பல கட்சிகள் என்னைப் புறக்கணித்தன.
ஆனால், ஆம் ஆத்மி கட்சி மட்டுமே என் குரலைக் கேட்டது. எனது யோசனைகளுக்கு செவிமடுத்தது. நானே பிரயாக்ராஜில் போட்டியிட சரியான வேட்பாளர் எனக் கூறி எனக்கு வாய்ப்பளித்தது.
என்னைப் போன்றோரை மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளராக ஆம் ஆத்மி போன்ற கட்சி முன்னிறுத்துவதே இந்த சமூகத்துக்கான வெற்றியாகக் கருதுகிறேன். என்னால் சமூகத்திற்கு நிறையவே செய்ய இயலும். மூன்றாம் பாலினத்தவரின் பிரச்சினைகளைத் தீர்க்க குரல் கொடுப்பேன்.
அலகாபாத் மூன்று பிரதமர்களை நாட்டுக்குக் கொடுத்துள்ளது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இத்தொகுதி மக்களின் பிரச்சினைகளை இன்னும் சீராகவில்லை. இங்கே வேலைவாய்ப்பின்மை நிலவுகிறது.
கல்வி, தண்ணீர், குடிநீர் வசதிகளில் பற்றாக்குறை நிலவுகிறது. நான் வெற்றி பெற்றால் நான் சார்ந்த திருநங்கை சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்க்க உழைப்பேன்.
70 ஆண்டுகளாக ஆட்சிகள் மாறுகின்றனவே தவிர எதுவுமே நடக்கவில்லை. தேர்தல் அறிக்கைகளில் பல வாக்குறிதிகளை அளிக்கின்றனர் ஆனால் அவற்றை யாரும் நிறைவேற்றுவதில்லை" என் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT