Last Updated : 02 May, 2019 05:32 PM

 

Published : 02 May 2019 05:32 PM
Last Updated : 02 May 2019 05:32 PM

கல்வி நிறுவனங்களில் பெண்கள் முகத்தை முழுதும் மூடும் புர்காவுக்குத் தடை: கேரள முஸ்லிம் கல்விக் கழகம் உத்தரவு

தங்கள் நிறுவன பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவிகள் முகத்தை முழுவதுமாக மூடும் வகையில் புர்கா அணியத் தடை விதித்து கேரளா முஸ்லிம் எஜுகேஷன் சொஸைட்டி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

கடந்த மாதம் ஈஸ்டர் பண்டிகையின்போது இலங்கை தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதை அடுத்து இலங்கையில் தற்போது முஸ்லிம் பெண்கள் புர்கா அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று கேரளாவில் கல்லூரிகளில் மாணவிகள் முகத்தை முழுவதுமாக மூடும் வகையில் புர்கா அணியத் தடை விதித்து கேரளா முஸ்லிம் எஜுகேஷன் சொஸைட்டி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

கேரள முஸ்லிம் கல்விக் கழகத்தில் 50 பள்ளிக்கூடங்கள், ஏராளமான கல்லூரிகள் உள்ளிட்டு 150 கல்வி நிறுவனங்கள் உள்ளன.

இதன்படி தங்கள் சொஸைட்டியின் 150 கல்வி நிறுவனங்களிலும் பெண்கள் முகத்தை மூடும் ஆடையை அணிந்து வர வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வுத்தரவு அடுத்த மாதம் தொடங்க உள்ள 2019-2020 கல்வியாண்டிலிருந்து உடனடியாக அமலுக்கு வரவேண்டும் எனவும் அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

புர்காவுக்குத் தடை விதிப்பதை தாங்கள் மதப் பிரச்சினையாகப் பார்க்கவில்லை எனவும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x