Published : 20 May 2019 03:29 PM
Last Updated : 20 May 2019 03:29 PM
சபரிமலை விவகாரத்தால் எந்த பாதிப்பும் இல்லை கேரளாவில் நிச்சயமாக இடதுசாரி ஜனநாயக முன்னணி வெற்றி பெறும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் (எக்ஸிட் போல்ஸ்) தெரிவித்துள்ளன.
இதனை புறக்கணித்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், கருத்து கணிப்புகளை ஏற்பதற்கில்லை. சபரிமலை விவகாரம் தேர்தலில் எதிரொலிக்கவில்லை.
உண்மையில் யார் பிரச்சினை செய்தார்கள் என்பது ஒவ்வொருவருக்கும் தெரியும். நாங்கள் நிச்சயமாக பெரும்பான்மை வெற்றி பெறப் போகிறோம்" எனக் கூறியுள்ளார்.
டைம்ஸ்நவ் - விஎம்ஆர் கருத்து கணிப்பு கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 20-ல் 15 தொகுதிகளைக் கைப்பற்றும் என கணித்துள்ளது.
சிபிஐ தலைமையிலான எல்டிஎஃப் ஆளுங்கள் 4 தொகுதிகள் வெற்றி பெறும் என்றும் பாஜக முதன்முறையாக தனது வெற்றிக் கணக்கை துவக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
கேரளாவின் வயநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT