Published : 17 May 2019 05:39 PM
Last Updated : 17 May 2019 05:39 PM
நமது தேசப்பிதா மகாத்மா காந்தியை 'பாகிஸ்தானின் தந்தை' என அழைத்த மத்தியப் பிரதேச மாநில பாஜக செய்தித் தொடர்பாள அனில் சவுமித்ரா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே நீக்கப்பட்டிருக்கிறார்.
சவுமித்ரா தனது ஃபேஸ்புக் பதிவில், மகாத்மா காந்தியை பாகிஸ்தானின் தந்தை எனக் குறிப்பிட்டிருக்கிறார். பாகிஸ்தான் பாபுவின் ஆசிர்வாதத்தில் பிறந்த தேசம் எனவே மகாத்மா காந்தி பாகிஸ்தானின் தந்தையே தவிர இந்தியாவின் தந்தை அல்ல எனப் பதிவிட்டிருந்தார்.
நேற்று, வியாழக்கிழமை அவர் இதனை தனது ஃபேஸ்புக்கில் பதிவு செய்திருந்தார்.
முன்னதாக போபால் தொகுதி பாஜக வேட்பாளர் மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவை உண்மையான தேசபக்தர் எனக் குறிப்பிட்டு சர்ச்சையைக் கிளப்பினார்.
பின்னர், மன்னிப்பு கேட்டு வருத்தம் தெரிவித்தார். இருந்தாலும்கூட சாத்வியை மன்னிக்க இயலாது என பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.
இந்நிலையில், மத்தியப் பிரதேச பாஜக செய்தித் தொடர்பாளர் மத்தியப் பிரதேச மாநில பாஜக செய்தித் தொடர்பாள அனில் சவுமித்ரா காத்மா காந்தியை 'பாகிஸ்தானின் தந்தை' என அழைத்து கட்சியில் இருந்தே நீக்கப்பட்டிருக்கிறார்.
இரண்டு தினங்களுக்கு முன்னதாக அரவக்குறிச்சியில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், "இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து" என்று கூறி சர்ச்சையைக் கிளப்பியதன் நீட்சியாக நாடு முழுவதும் காந்தி குறித்தும் கோட்சே குறித்தும் விமர்சனங்கள் எழக் காரணமாயிற்று என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT