Published : 17 May 2019 08:30 AM
Last Updated : 17 May 2019 08:30 AM
இந்தியாவில் தேர்தல் என்பது திருவிழா. பொதுக்கூட்டம், மேடை பிரச்சாரம், கருத்துக் கணிப்பு, பேட்டி, அலசல், விவாதம் எல்லாம் அனல்பறக்கும்.
இந்தியாவில் கிரிக் கெட்டும் இப்படித்தான். வீரர்களைவிட ரசிகர்கள் அதிகம் மோதிக் கொள் வார்கள்.
இந்தமுறை இரண் டும் சேர்ந்து வந்து விட்டது. கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கிய மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19-ம் தேதியோடு நிறைவுபெற இருக்கிறது. வரும் 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்து தேர்தல் முடிவுகள் வர இருக்கின்றன. இந்த பரபரப்புக்கு நடுவே, கடந்த மார்ச் 23-ம் தேதி தொடங்கிய ஐபிஎல் கிரிக்கெட் வைபவம் சீரும் சிறப்புமாக நடந்து, கடந்த 12-ம் தேதியோடு நிறைவு பெற்றிருக்கிறது.
நாளிதழ், தொலைக்காட்சிகள், வலை தளங்கள் எல்லாவற்றிலும் மாறிமாறி இது இரண்டைப் பற்றிய பேச்சுதான்.
இந்நிலையில், ஐபிஎல் கிரிக்கெட்டை யும், மக்களவைத் தேர்தலையும் பிசைந்து, புதிதாக ஒரு கணிப்புக் கருத்தை கிளப்பி விட்டிருக்கிறார்கள் ‘நெட்’டிசன்கள். அதன் விவரம்:
ஐபிஎல் போட்டியில் மும்பை, சென்னை, டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா, பஞ்சாப், ராஜஸ்தான், பெங்களூரு என மொத்தம் 8 அணிகள்.
இவற்றில் ராஜஸ்தான், பஞ்சாப், கொல்கத்தா (மேற்குவங்கம்), பெங்களூரு (கர்நாடகா) ஆகிய 4 மாநிலங்களும் பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்கள். அதாவது, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள். இவை நான்கும் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்பாகவே வெளியேறிவிட்டன.
எலிமினேட்டர் சுற்றில் ஹைதராபாத் (டிஆர்எஸ் ஆளும் தெலங்கானா மாநிலம்) வெளியேறிவிட்டது. தகுதிச்சுற்று 2-ல் டெல்லி (ஆம் ஆத்மி) வெளியேறிவிட்டது.
சென்னையும் (அதிமுக ஆளும் தமிழகம்), மும்பையும் (பாஜக ஆளும் மகாராஷ்டிரா) இறுதிச்சுற்று வரை முன்னேறின. இறுதியில், சென்னையை வெற்றிகொண்டு, கோப்பையை மும்பை கைப்பற்றியது. ஐபிஎல் போட்டி யில் மும்பைக்கு வெற்றி. அதேபோல, மக்களவைத் தேர்தலில், மகாராஷ்டிராவை ஆளும் பாஜகவுக்கே வெற்றி.
இறுதியில் ‘ஜெய்ஹிந்த்’, ‘பாரத் மாதா கீ ஜே’ என்று போடாதகுறையாக, வலைதளங்களில் வளையவருகிறது இந்த லேட்டஸ்ட் கணிப்புக் கருத்து.
கருத்துக் கணிப்புதான் வெளியிடக் கூடாது. இதுக்கெல்லாம் தடை எதுவும் இல்லியே?!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT