Published : 29 May 2019 01:30 PM
Last Updated : 29 May 2019 01:30 PM
காங்கிரஸ் கட்சி தலைமைப் பொறுப்பிலிருந்து ராகுல் காந்தி விலகக் கூடாது என்பதை வலியுறுத்தி அவரது வீட்டின்முன் தர்ணாவில் ஈடுபடவுள்ளார் டெல்லி முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஷீலா தீட்சித்.
ராகுல் காந்தியின் துக்ளக் சாலை வீட்டின் முன் இன்று மாலை 4 மணியளவில் அவர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளார்.
இத்துடன் தமிழக காங்கிரஸ் கமிட்டியும்கூட ராகுல் ராஜினாமா செய்யக்கூடாது என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற உள்ளது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 348 தொகுதிகளைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. பாஜக மட்டுமே 303 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் 52 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 90 தொகுதிகள் கிடைத்தது.
இந்நிலையில் தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிக்க கடந்த சனிக்கிழமை டெல்லியில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூடியது. அப்போது ராகுல் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ஆனால், அதை கட்சி நிராகரித்தது. இருப்பினும், அந்த அறிவிப்பிலிருந்து ராகுல் சற்றும் பின்வாங்காமல் இருக்கிறார்.
இதனையடுத்து, ராகுலை சமாதானப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் அவரது சகோதரியுமான பிரியங்கா உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.இது எதுவும் எடுபடவில்லை. இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தலைமைப் பொறுப்பிலிருந்து ராகுல் காந்தி விலகக் கூடாது என்பதை வலியுறுத்தி அவரது வீட்டின்முன் தர்ணாவில் ஈடுபடவுள்ளார் டெல்லி முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஷீலா தீட்சித்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT