Published : 25 Apr 2019 11:43 AM
Last Updated : 25 Apr 2019 11:43 AM

நீதிபதிகள் குழுவில் நீதிபதி ரமணாவைச் சேர்க்க வேண்டாம்: தலைமை நீதிபதிக்கு எதிராக புகார் கொடுத்தவர் ஆட்சேபணை

நீதிபதி என்.வி.ரமணா,  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய்யின் சிறந்த நண்பர், குடும்ப நண்பர் போன்றவர் ஆகவே அவரை நீதிபதிகள் குழுவில் சேர்க்க வேண்டாம் என்று  ரஞ்சன் கோகய் மீது பாலியல் புகார் கொடுத்த மனுதாரர் ஆட்சேபணை தெரிவித்துள்ளார்.

 

வெள்ளிக்கிழமையன்று நீதிபதிகள் முன்னால் ஆஜராகுமாறு புகார்தாரருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது, இதனையடுத்து புகார்தாரர் நீதிமன்றத்துக்கு 4 பக்க மனுவில் தன் கோரிக்கையை தெரியப்படுத்தியுள்ளார். அதாவது தான் ஒருமுறை தலைமை நீதிபதி வீட்டு அலுவலகத்தில் பணியாற்றிய போது இது தனக்கு தெரியவந்தது என்றும், “நீதிபதி ரமணா தலைமை நீதிபதியின் நெருங்கிய நண்பர், குடும்ப நண்பர் போன்றவர்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

“நீதிபதி என்.வி.ரமணா, தலைமை நீதிபதி விட்டுக்கு அடிக்கடி வரும் நண்பராவார். ஆகவே என்னுடைய புகார் மீதான புறவயமான, நியாயமான  நீதிவிசாரணை கிடைக்காதோ என்று நான் அஞ்சுகிறேன்” என்று உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார் மனுதாரர்.

 

மேலும், “எனக்கு எந்த பதவியோ, அந்தஸ்தோ கிடையாது என் பக்கத்தில் இருப்பது உண்மை மட்டுமே, நான் நிறைய வேதனைகளை அனுபவித்து விட்டேன். நானும் என் குடும்பத்தாரும் அனுபவித்த வேதனையும் சித்ரவதையும் விரைவில் முடிவுக்கு வரும் என்று நம்புகிறேன்” என்று அவர் தன் 4 பக்க கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.

 

வழக்கறிஞர் தன் சுயதெரிவே

 

கமிட்டி முன்பு ஆஜராவதற்கு முன்பாக தன் வழக்கறிஞர் யார் என்பதைத் தானே தீர்மானிக்க வேண்டும் என்று பாலியல் புகார் கொடுத்த மனுதாரர் தெரிவித்துள்ளார், நியாயமான விசாரணை தேவை எனும்போது இது என் அடிப்படை உரிமை என்பதையும் அவர் தெரிவித்துள்ளார்.

 

மேலும் கமிட்டி அமைத்ததற்காக உச்ச நீதிமன்றத்துக்கு அவர் நன்றியையும் பதிவு செய்துள்ளார்.  “நான் துரதிர்ஷ்டகரமான நிலையில் இருப்பதால் கவலையும், சோர்வும் அடைந்தேன் ஏனெனில் தலைமை நீதிபதிக்கு எதிராக பேச வேண்டியுள்ளதே என்று” என்றார்.

 

மேலும் அவர் கோரியிருப்பதாவது:

 

விசாகா வழிகாட்டுதல் மற்றும் பெண்கள் பாதுகாப்பு மற்றும் பணியிட பாலியல் துன்புற்த்தல் சட்டம் ஆகியவற்றையும் நீதிபதிகள் சிந்திக்க வேண்டும். கமிட்டியின் பெண் உறுப்பினர் வேண்டும். மேலும் செய்தித்தாள்களில் வெளியான தன் நடத்தைப் பற்றிய கருத்துக்கள், தலைமை நீதிபதியே தன் நடத்தைப் பற்றி கூறிய கருத்துக்கள் தன்ன அச்சப்படுத்துவதாகவும் தான் தனிமைப்படுத்தப்படுவதாகவும் உணர்வதாகத் தெரிவித்துள்ளார்.

 

“என்னுடைய நடத்தை காரணமின்றி சேதப்படுத்தப்பட்டுள்ளது. என்னை விசாரிக்காமலேயே இது நடந்துள்ளது. என்மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது” என்று நீதிபதி போப்தே கமிட்டிக்கு அவர் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

 

ஏப்ரல் 26ம் தேதி புகார்தாரர் கமிட்டி முன்னிலையில் ஆஜராகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x