Last Updated : 21 Apr, 2019 02:52 PM

 

Published : 21 Apr 2019 02:52 PM
Last Updated : 21 Apr 2019 02:52 PM

மாட்டுக்கு சொந்தக்காரர் யார்? - விநோத வழக்கினால் தடுமாறும் ஜோத்பூர் நீதிமன்றம்

மாட்டின் உண்மையான உரிமையாளர் யார் என்பதைக் கண்டுபிடிக்க பலவிதமான முயற்சிகளைக் கையாண்டும் பிரச்சினையை தீர்க்கமுடியாமல் விழிபிதுங்கியுள்ளது ஜோத்பூர் நீதிமன்றம்.

ஜோத்பூர் நீதிமன்றம் எதிர்கொண்ட விநோத வழக்கின் விவரம் வருமாறு:

ராஜஸ்தானில் ஒரு மாடு இரண்டு பேரில் யாருக்குச் சொந்தம் என்பதில் முடிவெடுப்பதில் நீதிமன்றம் குழப்பத்தில் உள்ளது. இது சம்பந்தமாக மாடு ஒரு முடிவெடுத்தால்தான் நீதிமன்றம் முடிவெடுக்கும் என்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.

கேள்விப்படுவதற்கு மிகவும் எளிமையானது போல காணப்படும் சில வழக்குகள் பெரும் இடியாப்ப சிக்கலைவிட கடினமானதாகவிடுகிறது சிலநேரங்களில்.

இதற்காக நீதிமன்றம் சில முறைகளை கையாண்டும் பார்த்துவிட்டது. கடைசியாக ஒரு யோசனையை முன்வைத்தது. அதன்படி அங்கு உயரதிகாரியாக பணிபுரியும் நீதிமன்ற ஆணையர் ராஜ்குமார் சவுகானை அழைத்தது. 

''இந்த மாட்டை நீண்டதூரம் தள்ளி கொண்டுபோய் விட்டுவிட்டு வாருங்கள், அங்கிருந்து வரும் மாடு பின்னர் எந்த திசையில் போகிறதென்று பார்க்கலாம்'' என்று  ஆணையருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படியே சவுகானும் ஒரு கேமராமேனோடு வந்தார். ஒரு பக்கம் படபிடிப்பு தொடங்கியது. 

மாட்டை நீண்ட தூரம் தள்ளி, கொண்டுபோய் விட்டுவிட்டு வந்துவிட்டார். பின்னர் அவர் கவனிக்கத் தொடங்கினார். அந்த மாடு கிட்டத்தட்ட ஒரு மைல் தூரம் அங்கிருந்து நடந்து வந்ததது. முதலில் உரிமைகொண்டாடும் முதல்நபர் வீட்டின் நுழைவாயில் கிராதி கேட்டின்முன் போய் நின்றது. சில நிமிடங்கள் கடந்தபிறகு, 

அந்த மாடு அப்படியும் இப்படியும் நடந்து, சிறிதுநேரம் தெருவை வலம்வந்தது. அதன் பிறகு அதேதெருவில் அமைந்துள்ள இரண்டாவதாக உரிமை கோரிய இன்னொரு நபரின் வீட்டுக்குள் நுழைந்தது.

இது எல்லாவற்றையும் நீதிமன்ற ஆணையருடன் வந்த கேமராமேன் படம் பிடித்துக்கொண்டார்.

அப்போது அங்கு மாட்டை இரண்டாவதாக உரிமை கோரியவர் வந்தார். ''பார்த்தீர்களா மாடு என் வீட்டுக்குள் நுழைந்துவிட்டது இது என்னுடைய மாடு என்று நிரூபணமாகிவிட்டது'' என்றார்.

இதுகுறித்து ஏன்என்ஐக்கு பேட்டியளித்த சவுகான் பேசுகையில், ''நீதிமன்றம் உத்தரவிட்டவாறே செய்துமுடித்துவிட்டேன். அதை எல்லாவற்றையும்கூட படம்பிடித்துவைத்துள்ளேன். அது விரைவில் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும்.

ஆனால் என்ன முடிவாகும் என்றுதெரியவில்லை. இது மேலும் குழப்பமாகவே தொடர்வதால் உரிமைகோரும் இருவரின் ஒப்புதலோடு முடிவெடுக்கப்பட்டு தற்போது மீண்டும் பசு பராமரிப்பு இல்லத்திற்கு கொண்டுபோய் விடப்பட்டுள்ளது'' என்றார்.

கடந்த ஏப்ரல் 12 அன்று, இந்த மாட்டுக்கு யார் சொந்தக்காரர் என்பதில் போலீஸ் கான்ஸ்டபிள் ஓம் பிரகாஷ் என்பவருக்கும் பள்ளி ஆசிரியர் ஷ்யாம் சிங் என்பவருக்கும் இடையே சிக்கல் உருவானது. அதனால் ஜோத்பூர் நீதிபதிகள் முன்னிலையில் கொண்டுவந்து மாடு நிறுத்தப்பட்டது.

அதற்குமுன்பே கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் ஒரு சிறு பிரச்சினையாகத்தான் இது ஏற்பட்டது. அப்போதே மாண்டூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இப்பிரிச்சினையை தீர்ப்பதில் காவல் நிலையம் தோல்வியடைந்த நிலையில்தான் இவ்வழக்கு கடைசியாக ஜோத்பூர் நீதிமன்றத்தை வந்தடைந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x