Published : 14 Apr 2019 08:21 AM
Last Updated : 14 Apr 2019 08:21 AM
தமது கட்சியின் தேசியத் தலைவர் களின் தலைமையில் ராஜஸ் தானில் பாஜகவினர் மக்களவை தேர்தலை சந்திக்கவுள்ளனர்.
கடந்த வருடம் ராஜஸ்தானில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர் தலில் பாஜகவிடம் இருந்த ஆட்சி யை காங்கிரஸ் கைப்பற்றியது.
வழக்கமாக சட்டப்பேரவை முடிவுகளால் ஏற்படும் தாக்கம் அம்மாநில மக்களவைத் தேர் தலில் பெரிய அளவில் இல்லை. இதனை புரிந்துகொண்ட பாஜக தலைமை, மக்களவைத் தேர்தலுக் கான பொறுப்பை கட்சியின் மாநிலத் தலைவர்களிடம் வழங்க வில்லை.
அதற்கு பதிலாக, கட்சியின் தேசியத் தலைவர்களான ஜாவ்டே கர், சுதான்ஷு மற்றும் அவி னேஷ் ராஜிடம் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த மூன்று தேசிய தலைவர் களால் ராஜஸ்தானின் இரண்டு பலம்வாய்ந்த தலைவர்களை பாஜக வளைத்துள்ளது. அந்த வகையில், ராஜஸ்தானில் ஜாட் சமூகத் தலைவரான ஹனுமன் பேலிவாலின் தேசிய ஜனநாயகக் கட்சியுடன் கூட்டணி அமைத்து, குஜ்ஜர் இனத் தலைவர் கிரோதி சிங் பன்ஸ்லாவை தங்கள் கட்சியில் பாஜக இணைத்துள்ளது.
இதனால், ராஜஸ்தானில் 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர் தலில் பாஜக பெற்ற 25 தொகுதி களில் மீண்டும் வெற்றி கிடைக்கும் எனக் கூறிவிட முடியாது.
இதற்கு காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வாரிசுகளும், முக்கியத் தலைவர்களும் கார ணம். முதல்வர் அசோக் கெலாட்டின் மகனான வைபவ் கெலாட் ஜோத்பூரில் போட்டியிடு கிறார். பாஜகவின் நிறுவனர்களில் ஒருவரான ஜஸ்வந்த்சிங் மகன் கர்னல்,மான்வேந்தரா சிங் பார்மர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இவர்களுடன் அல்வரில் மத்திய அமைச்சர் ஜிதேந்திரா சிங் நிறுத்தப்பட்டுள்ளார். தலித் சமூகத் தலைவர்களில் ஒருவரான முராரிலால் மீனாவின் மனைவி சவீதா மீனாவை தோசாவில் நிறுத்தி உள்ளனர்.
பாஜகவில் பலமான வேட் பாளர்களாக 14 எம்பிக்கள் மீண் டும் நிறுத்தப்பட்டுள்ளனர். இவர் களில், வசுந்தாரே ராஜேவின் மக னான துஷ்யந்த் சிங், ஜெய்பூரின் மகராணியான காயத்ரி தேவியின் பேத்தி தியா குமாரி ஆகியோர் முக்கியமானவர்கள்.
சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாக 3 எம்எல்ஏக் களை பெற்ற பாரதிய பழங்குடி கட்சி(பிடிபி) மக்களவைக் காக பாக்வாடாவில் போட்டியிடு கிறது.
இவர்களுடன் மாயாவதியின் பகுஜன் சமாஜ் 19 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இவ்விரு கட்சிகளும் பிரிக்கும் வாக்குகள் காங்கிரஸுக்கு சாதகமாக இருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT