Published : 24 Apr 2019 12:00 AM
Last Updated : 24 Apr 2019 12:00 AM
வரும் மக்களவைத் தேர்தலில் உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகப் போட்டியிட தெலங்கானா விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
தெலங்கானா மாநிலத்தின் நிஜாமாபாத் மக்களவைத் தொகுதியில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் மொத்தம் 185 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்கள் சுமார் 170 பேர் அப்பகுதி விவசாயிகள் ஆவர். மஞ்சள் உற்பத்தி செய்யும் இவர்கள், மஞ்சளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என கோரி வருகிறனர். இவர்களின் கோரிக்கை ஏற்கப்படாததால் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் இங்கு போட்டியிட்டனர்.
இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியிலும் 50 பேர் வேட்புமனு தாக்கல் செய்வது என நிஜாமாபாத் பகுதி விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறும்போது, “நாங்கள் யாருக்கும் போட்டியாக தேர்தல் களத்தில் நிற்கவில்லை. எங்களுடைய பிரச்சினையை நாடு முழுவதும் கொண்டுசெல்ல வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். புதிய அரசாவது எங்கள் பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வை காணவேண்டும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT