Published : 23 Apr 2019 12:00 AM
Last Updated : 23 Apr 2019 12:00 AM

தங்கத்தை வங்கிதான் ஒப்படைக்க வேண்டும்: திருப்பதி தேவஸ்தான அதிகாரி கருத்து

திருப்பதி ஏழுமலையானுக்கு சொந்தமான 1,381 கிலோ தங்க நகைகள், கடந்த 20-ம் தேதி திருவள்ளூர் அருகே சோதனை சாவடியில் பறிமுதல் செய்யப்பட்டது. அதன்பின்னர், பஞ்சாப் நேஷனல் வங்கியினர் தகுந்த ஆதாரங்களை சமர்ப்பித்த பின்னர் அவை மீண்டும் தேவஸ்தான கஜானாவில் ஒப்படைக்கப்பட்டன.

இதுகுறித்து நேற்று தேவஸ்தான அதிகாரி அனில்குமார் சிங்கால் கூறியதாவது:கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் 18-ம் தேதி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் 1311 கிலோ தங்கத்தை ‘தங்கம் வைப்பு திட்டம்’ கீழ் டெபாசிட் செய்தோம். இது 3 ஆண்டுகளில் முதிர்வடைந்து, இந்த ஆண்டு ஏப்ரல் 18-ம் தேதி நமக்கு வட்டியின் கீழ் 70 கிலோ தங்கம் போட்டு மொத்தம் 1,381 கிலோ தங்கம் வரவேண்டியுள்ளது.

இதுகுறித்து நாங்கள் கடந்த மார்ச் மாதம் 27-ம் தேதி சம்மந்தப்பட்ட வங்கிக்கு கடிதம் எழுதினோம். அதன்பின்னர், வங்கியினர் இதற்கு சம்மந்தபட்ட நகைகளை சென்னையிலிருந்து வேன் மூலம் திருப்பதிக்கு கொண்டுவந்துள்ளனர். அப்போது இவைகளை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதற்கு தகுந்த ஆவணங்கள் இருந்ததா ? இல்லையா ? பாதுகாப்பு இருந்ததா ? இல்லையா ? என்பது எங்களுக்கு தேவையில்லை. இது மொத்தமும் வங்கியின் பொறுப்பு. இதில் தேவஸ்தானத்தினர் மீது எந்தவித தவறும் இல்லை என்றார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x