Last Updated : 10 Apr, 2019 02:59 PM

 

Published : 10 Apr 2019 02:59 PM
Last Updated : 10 Apr 2019 02:59 PM

உ.பி.யின் சஹரான்பூரில் காங்கிரஸுக்கு பீம் ஆர்மி ஆதரவு

உபியின் மேற்குப்பகுதியில் உள்ள 8 தொகுதிகளுக்கு முதல்கட்டமாக நாளை தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஒன்றான சஹரான்பூரில் தலீத் சமூகக் கட்சியான பீம் ஆர்மி, காங்கிரஸுக்கு ஆதரவளித்துள்ளது.

 

இது குறித்து பீம் ஆர்மியின் தலைவர் ராவண் எனும் சந்திரசேகர ஆசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தலீத் சமூகத்தினர் அனைவரும் சஹரான்பூரில் காங்கிரஸ் வேட்பாளரான இம்ரான் மசூதிற்கு ஆதரவளித்து வாக்களிக்க வேண்டும்.’ எனத் தெரிவித்துள்ளார்.

 

ஆசாத்தின் இந்த அறிக்கை, மாயாவதி, அகிலேஷ்சிங் யாதவ் அமைத்துள்ள மெகா கூட்டணியை அதிருப்திக்கு உள்ளாகி உள்ளது. இவர் தலீத் வாக்குகளை பிரித்து பாஜகவின் ஏஜெண்டாக ஆசாத் செயல்படுவதாக மாயாவதி ஏற்கனவே குற்றம் சுமத்தி இருந்தார்.

 

உபியில் மாயாவதிக்கு அடுத்தபடியாக புதிய தலைவராக ராவண் உருவெடுத்து வருகிறார். எனவே, ராவணை தம் பக்கம் வளைத்து தலீத் வாக்குகளை பெற பிரியங்கா முயன்றார். கடந்த மாதம் ராவண் மருத்துவமனை சிகிச்சையில் இருக்கும் போது இதன் காரணமாகவே அவரை பிரியங்கா சந்தித்திருந்தார்.

 

முஸ்லிம்களால் வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்படும் தொகுதியாக இருப்பது சஹரான்பூர். இங்கு மெகா கூட்டணி சார்பிலும் பைஜுல் ரஹ்மான் என ஒரு முஸ்லிம் போட்டியிடுகிறார்.

 

இதனால், முஸ்லிம் வாக்குகள் பிரிந்து பாஜகவின் வேட்பாளர் வெல்லும் சூழல் உருவாகி உள்ளது. இங்கு இம்ரான் மசூதிற்கு ஆதரவாக நேற்று காங்கிரஸின் பொதுச்செயலாளர் பிரியங்கா வத்ரா பிரச்சாரம் செய்ய வந்திருந்தார்.

 

பிரியங்கா பிரச்சாரம்

 

அவரது பிரச்சாரத்தில் காங்கிரஸ் கொடிகள் வீசி ஏறியப்பட்டு பாஜகவினர் ஆர்பாட்டம் செய்தனர். ‘மோடி! மோடி!’ எனக் குரல் கொடுத்தவர்களை பார்த்த பிரியங்கா, அவர்கள் மீது பூவிதழ்களை வீசி ‘சத்தமாகக் குரல் கொடுக்கும்படி பாகஜகவினரிடம் கேட்டுக் கொண்டார்.

 

இதற்கு காங்கிரஸ் ஆதரவாளர்கள் ‘சவுக்கிதார் ஒரு திருடன்’ எனப் பதில் குரல் கொடுத்து பாஜகவினரை கூட்டத்தில் இருந்து விரட்டினர். சஹரான்பூர் அருகிலுள்ள கைரானா, பிஜ்னோர் ஆகிய தொகுதிகளிலும் பிரியங்கா நேற்று பிரச்சாரம் செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x