Published : 03 Apr 2019 04:17 PM
Last Updated : 03 Apr 2019 04:17 PM
நாட்டின் வளர்ச்சிக்காக பாஜக எதையும் செய்யவில்லை என்று பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.
பாட்னாவில் இன்று அவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், ''கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் தேசத்தின் வளர்ச்சிக்காக பாஜக செய்தது என்பதைப் பற்றி சொல்ல எதுவும் இல்லை.
பாஜகவைப் போலன்றி, தேசத்தின் வளர்ச்சியை நோக்கி உழைத்துக் கொண்டிருப்பது எங்கள் ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சி மட்டுமே.
மற்றபடி, காங்கிரஸ் கட்சி தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளதைப் பற்றிய கேள்விக்கு நான் எதுவும் சொல்வதற்கில்லை'' என்றார்.
மார்ச் 22-ம் தேதி பெரும் கூட்டணி அறிவித்துள்ள தொகுதிப் பங்கீட்டு உடன்படிக்கையின் படி பிஹார் மாநிலத்தில் உள்ள 40 தொகுதிகளில் 20 இடங்களில் ராஷ்டிரிய ஜனதா தளம் போட்டியிடுகிறது.
பிஹாரில் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 23 அன்று நடைபெறும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT