Published : 14 Apr 2019 10:35 AM
Last Updated : 14 Apr 2019 10:35 AM
மனு சாக்யா, சந்திரபான் சிங் ஆகிய இருவரும் ஒருவரிடமிருந்து ஒருவர் 300 கிமீ தொலைவில் வசிப்பவர்கள். ஆக்ராவில் எய்திகா பகுதியில் மனுசாக்யா மின்னணுப் பொருட்களை பழுதுபார்க்கும் பணியில் இருக்கிறார். சந்திரபான் சிங் மளிகைக் கடை வைத்துள்ளார். இதில் சந்திரபான் சிங் உயர்சாதி தாக்கூர். சாக்கியா என்பவர் கோரி என்ற தலித் பிரிவைச் சேர்ந்தவர்.
இருவருக்கும் இடையே சாதி ரீதியாக இட ரீதியாக பெரிய தொலைவு இருந்தாலும் இருவரின் தேர்தல் வாக்குப்பதிவு தெரிவு ஒன்றாகவே இருக்கிறது. இங்கு இன்னும் கூட பாஜகவின் வாக்கு சேகரிப்புக் காரணி பிரதமர் மோடிதான். உ.பி.யின் உள்ளூர் எம்.பி.க்கள் மீது மக்கள் கொண்டுள்ள தீராத கோபத்துக்கு ஈடுகட்டுவது மோடி என்ற பெயர்தான். கவுஷல் கிஷோர் என்ற பாஜக எம்பி. தொகுதிப்பக்கமே எட்டிப்பார்க்காதவர், இவர்தான் சந்திரபான் சிங்கின் தொகுதியில் நிற்கிறார், எம்.பி.பற்றி தனக்குக் கவலையில்லை.. ,’மோடிஜீ’ தான் எனக்கு பிடிக்கும் அவருக்காக என் வாக்கு என்கிறார்.
பிரதமரின் பிரச்சார விஷயங்களான விவசாயிகள் திட்டம், புதிய கழிப்பறைகள், மின்சாரம், சமையல் எரிவாயு சிலிண்டர் கனெக்ஷன் என்று கடந்த 5 ஆண்டுகள் ஆட்சி இதற்கு முன் இல்லாதது என்று விதந்தோதுகிறார்.
மாறாக ஆக்ராவில் ஏற்கெனவே உள்ள எம்.பி.ராம்ஷங்கர் கதீரா இம்முறை மாற்றப்பட்டுள்ளார், உள்ளூர் பாஜக எம்.எல்.ஏ. கிரிராஜ் தர்மேஷ் மீது தலித் சாக்யா கடும் கோபத்தில் இருக்கிறார். மின்கட்டண உயர்வு, ஜிஎஸ்டி, பணமதிப்பு நீக்கம், என்று பொருளாதாரத்தின் வெகுஜன வடிவங்களை நசுக்கியது என்ற்கிறார் சாக்யா. இவ்வளவு விமர்சனங்கள் வைத்தாலும் மோடி, “இந்த நாட்டுக்கு நல்ல எதிர்காலத்தை வழங்க முடியும்” என்று நம்புகிறார். பாலகோட் தாக்குதல் அபினந்தனைக் கொண்டு வந்தது ஆகியவற்றை மோடியின் சாதனையாக இவர் பாராட்டுகிறார்.
சாக்யா வசிக்கும் பகுதிக்கு சற்று தொலைவில் உள்ள காலனி ஒன்றில் மகேந்திர குமார் பிரஜாபதி மற்றும் அண்டைவீட்டார்கள் தங்கள் தொகுதி எம்.பி.மீது கடும் கோபத்தில் இருக்கின்றனர், சாக்கடை நிரம்பி வழிகிறது, உடைந்த சாலைகள், இவர்கள் பிரச்சினை, பலமுறை எம்.பிக்கு மனு கொடுத்தும் பயனில்லை என்கின்றனர் இந்த ஓபிசி, தலித் சமூகத்தினர்.
ஆனால் இவர்கள் அனைவருமே மோடிக்கும் இதற்கும் தொடர்பில்லை என்பது போல், “மீண்டும் பிரதமராவதற்கு மோடி தகுதியானவர்தான். கீழே உள்ளவர்கள் யாரும் தங்கள் கடமையை சரியாகச் செய்வதில்லை” என்று மோடிக்கு சர்டிபிகேட் கொடுக்கின்றனர்.
லக்னோவிலிருந்து கொஞ்சம் மேற்கு முகமாக நகர்ந்தால் மட்டுமே அகிலேஷ், மாயாவதி, ராஷ்ட்ரிய லோக் தள் தாக்கம் தெரிகிறது, இங்குதான் பாஜகவுக்கு கடும் சவால்கள் காத்திருக்கின்றன. இங்குதான் விவசாயிகள் அதிருப்தி, வேலையில்லாப் பட்டதாரிகளின் கோபம் அதிகமாக மோடிக்கு எதிராக உள்ளது. மதுராவில் வெளிப்படையாகவே பாஜகவின் ஹேமமாலினிக்கு எதிரான போக்கே உள்ளது.
ஜாட்டுகளும், தாக்குர்களும் பாஜக, ராஷ்டிரிய லோக் தள் என்று பிரிந்து கிடக்கின்றனர். மந்ததா சிங் என்ற தாக்கூர் பிரிவைச் சேர்ந்தவர், ஆசிரியர், முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது கடும் கோபத்தில் உள்ளார். ஆனால் தேச நலன்களுக்காக இவரை பொறுத்துக் கொள்வதாகத் தெரிவித்தார்.
“உலக அளவில் இந்தியாவின் மதிப்பை மோடி உயர்த்தியுள்ளார், இவரது ஆட்சியில் இந்தியா பிற நாடுகளுக்குக் கடன்படவில்லை” என்றார். இவர் மாலினிக்குத்தான் தன் வாக்கு என்கிறார். ஆர்.எல்.டி. கட்சி தாக்கூர் சாதியின் நரேந்திர சிங்கை நிறுத்தியும் மாலினிக்கே வாக்கு என்கிறார்.
பாகு சிங் என்ற ஒரு ஜாட் விவசாயி, இவர் உருளைக்கிழங்குகளை பயிர் செய்பவர், மோடி அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்கிறார். விவசாயிகள் வருவாய் இரட்டிப்பாகியதாக மோடி அரசு கூறிக்ப்கொள்வது மீது அவர் பாஜகவை கடுமையாகச் சாடினார்.
கடுமையாக விமர்சித்தாலும் ஆர்.எஸ்.எஸ் அனுதாபியான இவர் மோடிக்குத்தான் தன் வாக்கு என்கிறார். ‘நான் ஓர் இந்து, என் வாக்கு இந்துத்துவா கட்சிக்கே’ என்கிறார் இவர்.
ஆகவே உ.பி.யில் பாஜக மீதுள்ள கோபம் மோடிக்கு எதிரானதாக இல்லை என்பதே பாஜகவுக்குச் சாதகமாக அமைந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT