Last Updated : 26 Apr, 2019 08:25 AM

 

Published : 26 Apr 2019 08:25 AM
Last Updated : 26 Apr 2019 08:25 AM

துப்பாக்கி தோட்டாக்களுக்கு அஞ்சி வாக்களித்த காலம் மலையேறிவிட்டது- உ.பி. சம்பலில் மாறிவரும் தேர்தல் காட்சிகள்

உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் அமைந்துள்ளது சம்பல் பள்ளத் தாக்கு. இப்பகுதியில் சுமார் பத்து வருடங்கள் முன்புவரை கொள்ளை யர்கள் நடமாட்டம் அதிகம் இருந் தது. உ.பி, ம.பி போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டு விட்ட முக்கிய கொள்ளையர்களான தத்துவா எனும் ஷிவ்குமார் பட்டேல், டோக்கியா எனும் அம்பிகா பிரசாத் உள்ளிட்டவர்கள் ஆதிக்கம் இருந்தது. இதனால், தேர்தல் சமயங்களில் அப்பகுதி கிராமவாசிகள் கொள்ளையர்கள் விரும்பும் வேட்பாளர்களுக்கு வாக் களித்தது உண்டு. உ.பி.யின் பாந்தா-சித்ரகுட், அலகாபாத், ம.பி.யின் சத்னா மற்றும் பண்ணா, ராஜஸ் தானின் தோல்பூர், பரத்பூர் ஆகிய தொகுதிகளின் கிராமவாசிகள் அதில் இடம் பெற்றிருந்தனர்.

தற்போது பல முக்கிய கொள் ளையர்களின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு விட்ட சம்பலில் சிறிய கொள்ளையர்கள் மட்டும் மிஞ்சியுள்ளனர். இதனால், சம்பல் வாசிகள் தம் விருப்பத்திற்கு ஏற்ற படி வாக்களிக்கும் சூழல் உருவாகி உள்ளது. எனினும், கொள்ளையர் களுடனான உறவுகள் முற்றிலும் விடுபடாததுபோல் அவர்களுக்கு ஆதரவளித்தவர்களும், உறவினர் களும் சம்பலின் வேட்பாளர்களாக உள்ளனர்.

பாந்தா-சித்ரகுட்டில் சமாஜ் வாதியில் ஷியாமா சரண் குப்தா போட்டியிடுகிறார். 2014-ல் பாஜக சார்பில் அலகாபாத்தில் போட்டி யிட்டவருக்கு வெற்றி கிடைத் திருந்தது. உ.பி.யின் பிரபல வியாபாரி. 2009-ல் பாந்தா-சித்ரகுட் டின் சமாஜ்வாதியின் எம்பி.யான குப்தா மீது கொள்ளையர்களுக்கு உதவியதாக புகார்கள் உள்ளன. இதே புகாரில் சிக்கிய ஆர்.கே.சிங் பட்டேல் இந்தமுறை பாஜக சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார். 2004-ல் சமாஜ்வாதி எம்பி.யாகவும், அதற்கு முன் பகுஜன் சமாஜின் உ.பி. அமைச்சராகவும் ஆர்.கே.சிங் பட்டேல் இருந்தார். இந்த இரு வருக்கும் இடையில் காங்கிரஸில் தத்துவாவின் சகோதரரான பாலகுமாரால் மும்முனைப்போட்டி நிலவுகிறது. இவர் சமாஜ்வாதி எம்பி.யான பூலான் தேவிக்கு பின் மிர்சாபூர் தொகுதியில் அதே கட்சியில் போட்டியிட்டு வென்றவர்.

பாலகுமாரின் மகனான ராம் சிங், பிரதாப்கர் மாவட்டத்தின் பட்டி தொகுதி எம்எல்ஏவாக சமாஜ் வாதியில் இருந்தவர். இவரும் தம் தந்தையுடன் சேர்ந்து காங்கிரஸில் இணைந்துள்ளார். தற்போது காங் கிரஸில் ராம்சிங் சம்பல் பகுதியின் மத்தியபிரதேசத்தில் அமைந்துள்ள கஜுராஹோ தொகுதியில் போட்டி யிட முயன்று வருகிறார். இதே தொகுதியில் சமாஜ்வாதி சார்பில் தத்துவாவின் மகனான வீர்சிங் பட்டேல் போட்டியிட வாய்ப்பு கேட்டு வருகிறார். சித்ரகுட்டின் சட்டப் பேரவை தொகுதியில் சமாஜ்வாதி யின் எம்எல்ஏவாக இருந்தவர் இந்த வீர்சிங். சரணடைந்த மல்கான் சிங்(74) மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறார். பாஜகவில் இருந்தவருக்கு உ.பி.யின் தவுர ஹரா தொகுதியில் போட்டியிட ஷிவ்பால்சிங் யாதவின் ஆர்எஸ் பிஎல் கட்சி வாய்ப்பளித்துள்ளது. இந்த தொகுதிகளில். வரும் மே 6-ம் தேதியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x