Published : 03 Mar 2019 02:38 PM
Last Updated : 03 Mar 2019 02:38 PM
காஷ்மீரில் நிலவும் சூழ்நிலையைப் பயன்படுத்தி தங்கள் தோல்விகளை மூடி மறைக்கும் முயற்சியில் மோடியும் பாஜகவும் ஈடுபட்டுள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் மாயாவதி இன்று பேசினார். கூட்டணிக் கட்சிகளுடன் நடந்து கொள்வதுகுறித்து தனது கட்சி நிர்வாகிகளுக்கு சில வழிமுறைகளை அவர் கூறினார்.
அப்போது மாயாவதி தொண்டர்களிடையே பேசுகையில், ''கடந்த சில நாட்களாக காஷ்மீரில் நடக்கும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு நாடு கவலை அடைந்துள்ளது. அங்கு என்ன நடந்தது என்பது பற்றி பாஜக குறிப்பாக பிரதமர் மோடி மக்களிடமிருந்து மறைக்க முடியாது.
தங்கள் அரசியல் நலன்களுக்காக வேண்டி தேசியப் பாதுகாப்பு விஷயங்களை புறந்தள்ளுகிறார்கள். அங்கு என்ன நடந்தது என்பதையும் மறைக்கிறார்கள்.
ஒரே நாளில் இந்தியா விரோதப் போக்கை உருவாக்கி விட்டது. இந்நிலையில் நாட்டுக்கு உறுதியான தலைமை தேவைப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தேசியப் பாதுகாப்பு பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, அதன் மூலம் அரசியல் ஆதாயங்களைப் பெற முயற்சிக்கிறார்.
தங்கள் தோல்விகளை மூடி மறைக்கவே காஷ்மீரின் இன்றைய சூழ்நிலையைத் தங்களுக்கு சாதமாக்கிக்கொண்டிருக்கிறது பாஜக. தேசிய உணர்ச்சிகளை வைத்து மக்களை ஏமாற்றுவது மிகவும் விபரீதமான போக்கு''.
இவ்வாறு மாயாவதி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT