Published : 07 Mar 2019 05:22 PM
Last Updated : 07 Mar 2019 05:22 PM
தேர்வின்போது அதிகாரிகள் ஆடைகளை அவிழ்த்து சோதனை செய்ததால், அவமானத்தால் 10-ம் வகுப்பு பழங்குடியின மாணவி தற்கொலை செய்துகொண்டார். சத்தீஸ்கரின் ஜாஷ்பூரில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
பழங்குடியின மாணவி ஒருவர் ஜாஷ்பூரில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது சம்பவ இடத்துக்கு அதிரடிப் படையினர் வந்தனர். சிறுமி பிட் வைத்திருந்ததாகக் கூறி, அவரைச் சோதனை செய்தனர். சிறுமியின் ஆடைகளை அவிழ்த்து சோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால் பரிசோதனையில் பிட் எதுவும் இல்லாதது தெரிந்தது. இதையடுத்து தேர்வை மீண்டும் எழுதுமாறு சிறுமிகள் அதிகாரிகளிடம் உத்தரவிட்டனர். இதையடுத்து வீட்டுக்குச் சென்ற சிறுமி, பெற்றோரிடம் ''எனக்கு செத்துப் போய்விடலாம் போல இருக்கிறது'' என்று தொடர்ச்சியாகக் கூறியுள்ளார். ஆனால் தேர்வை ஒழுங்காக எழுததால் சிறுமி அவ்வாறு கூறுவதாக பெற்றோர் எண்ணினர்.
சிறுமியைத் திட்டியவர்கள், மற்ற தேர்வுகளை ஒழுங்காக எழுதுமாறு அறிவுறுத்தினர். இரண்டு நாட்கள் கழித்து சிறுமியைக் காணவில்லை. அடுத்த நாள் சிறுமியின் உடல் மரத்தில் தொங்கிக் கொண்டிருந்ததைக் கண்டனர்.
அவமானம் காரணமாக அச்சிறுமி மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அறிந்த சிறுமியின் சக மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்துப் பேசிய மாவட்ட வருவாய் அதிகாரி ரவி மிட்டல், ''இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும். இந்த சம்பவம் கண்டனத்துக்குரியது. மாணவர்கள் இதுகுறித்துக் கவலைப்பட வேண்டாம்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT