Published : 21 Mar 2019 07:02 AM
Last Updated : 21 Mar 2019 07:02 AM
ஆந்திரா - தமிழக எல்லையில் காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 6 கோடி மதிப்பிலான தங்கம், வைரக் கற்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
ஆந்திர மாநிலத்தில் வரும் ஏப்ரல் 11-ம் தேதி சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ளதால், மாநிலம் முழுவதும் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.
வெளி மாநிலங்களில் இருந்து வாக்காளர்களுக்கு தேர்தல் சமயத்தில் பணப் பட்டுவாடா செய்யப்படாமல் தடுப்பதற்காக தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் காலை சென்னையிலிருந்து பொன்னை வழியாக சித்தூர் நோக்கி வந்து கொண்டிருந்த காரை, கங்காத நெல்லூர் எனும் இடத்தில் போலீஸார் சோதனையிட்டனர்.
அதில், உரிய ஆவணங்கள் இன்றி 11.677 கிலோ தங்கம் மற்றும் 60 வைர கற்கள் இருந்தது தெரியவந்தது. உடனடியாக இது குறித்து மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான பிரத்யும்னாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.6 கோடி இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, காரில் இருந்த தங்கம், வைர கற்கள் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நகைகள் பிரபல நகைக்கடை ஒன்றுக்கு சொந்தமானது என விசாரணையில் தெரியவந்துள்ளது.ஆந்திராவில் வாகனச் சோதனையில் கைப்பற்றப்பட்ட தங்கம், வைரம் அடங்கிய பெட்டிகள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT