Published : 07 Mar 2019 01:30 PM
Last Updated : 07 Mar 2019 01:30 PM
ஜம்மு காஷ்மீரின் ஜம்மு பேருந்து நிலையத்தில் குண்டு வெடித்ததில் 18 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்துப் பேசிய ஜம்மு ஐஜிபி எம்.கே.சின்ஹா, '' ஜம்மு பேருந்து நிலையத்தில் இன்று மதியம் 12 மணி அளவில் குண்டு வெடித்தது. ஆரம்பகட்ட விசாரணையில் இது கை எறிகுண்டு என்று தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தால் அருகில் இருந்த சிறுவியாபாரிகளும் பொதுமக்களும் காயமடைந்துள்ளனர். சுமார் 18 பேருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்தைப் பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது'' என்றார்.
புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம் பாலகோட் தாக்குதலை நடத்தியது. இதனால் எல்லைப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில் தினந்தோறும் பாகிஸ்தான் எல்லையில் அத்துமீறித் தாக்குதல் நடத்துவதும் இந்தியா பதிலடி கொடுப்பதும் தொடர் கதையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT