Last Updated : 23 Sep, 2014 09:36 AM

 

Published : 23 Sep 2014 09:36 AM
Last Updated : 23 Sep 2014 09:36 AM

ஜம்மு-காஷ்மீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ராணுவ நிலைகள் வேறிடங்களுக்கு மாற்றம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ராணுவ நிலைகள், கட்டுப்பாட்டு எல்லைக்கோடு அருகேயுள்ள சோதனைச் சாவடிகள் வேறு இடங்களுக்கு உடனடியாக மாற்றப்பட்டுள்ளன.

காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதி யில் ராணுவ முகாம்கள், பதுங்கு குழிகள், சோதனைச் சாவடிகள் உள்ளிட்ட 70 ராணுவ நிலைகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டி ருந்தன. ஆனால், பாதுகாப்புப் படை யினர் மிகத் துரிதமாக ராணுவ நிலைகளை வேறு இடங்களுக்கு மாற்றி, எல்லைப் பகுதியில் பாது காப்புப் பணியைத் தொடர் கின்றனர். சில இடங்களில் பாதியள வும், சில இடங்களில் முழுமை யாகவும் ராணுவ நிலைகள் வெள் ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தன.

இதுதொடர்பாக மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாவது:

30-40 ராணுவ முகாம்கள், சோதனைச் சாவடிகள், பதுங்கு குழிகளை வெள்ளம் மிக மோசமாக பாதித்துவிட்டது. அவை, காஷ்மீரில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக அமைக்கப்பட்டவை.

அதைப்போலவே, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே, 30 ராணுவ நிலைகள் மோசமாக பாதிக்கப்பட்டன. 10-15 பதுங்கு குழிகள் மொத்தமாக அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.

ஆனால், வெகு துரிதமாகச் செயல்பட்டு, ராணுவ நிலைகளை வேறு இடங்களுக்கு மாற்றி விட்டோம். பதுங்கு அரண்கள் அடித்துச் செல்லப்பட்டுவிட்டதால் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் இடைவெளி இன்றி ராணுவம் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது.

ராணுவ வீரர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பில்லை. புலாவாமா பகுதியில் படகு கவிழ்ந்ததில் இருவரும், பூஞ்ச் பகுதியில் நிலச்சரிவில் ஒருவரும் என மூன்று பேர் மட்டுமே ராணுவ தரப்பில் உயிரிழந்துள்ளனர்.

மூன்று சிறிய அளவிலான ஆயுதக் கிடங்குகள் பாதிக் கப்பட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 2.30 லட்சம் மக்களை நாங்கள் காப்பாற்றியுள்ளோம். எல்லையில் உச்ச கட்ட கண்காணிப் பில் ஈடுபட்டுள்ளோம். ஊடுருவ முயன்ற 10 தீவிரவாதிகளைக் கொன்ற பகுதியில் கண்காணிப் பைக் குறைக்கப் போவதில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கூடுதல் கண்காணிப்பு

எல்லையில் சுமார் 40 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள மூன்றடுக்கு வேலி சிதைந்துள்ளது. இங்கு 24 மணி நேரமும், கண்காணிப்பை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. எல்லையில் வேலிகள் சிதைந்து இடைவெளி ஏற்பட்டுள்ள பகுதிகளை சீரமைக்க ராணுவம் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது.

வெறிச்சோடிய லால் சவுக்

பிரபல சந்தையான லால் சவுக் தற்போது வெறிச்சோடிக் காணப் படுகிறது. வெள்ள சேதத்திலிருந்து அப்பகுதி மீளாததால், ஈத் பண்டிகைக்கு தயாராக முடியாமல் அந்த சந்தை திணறி வருகிறது.

மிக அதிகபட்ச நிதி

ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கூறும்போது, “வேளாண்மை, தோட்டக்கலை, உள்கட்டமைப்பு என அனைத்துத் துறைகளும் மிக மோசமான பாதிப்பைகளைச் சந்தித்துள்ளன. மறுகுடியமர்வைச் செயல்படுத்த மத்திய அரசிடமிருந்து மிகத் தாராளமான அதிகபட்ச நிதியுதவியை எதிர்பார்க்கிறோம்” என்றார்.

அறுவடை செய்யப்பட்ட ஆப்பிள்களை தரம்பிரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தோட்டப் பணியாளர்கள். காஷ்மீரில் வெள்ளப்பெருக்கு காரணமாக மொத்த உற்பத்தியில் 60 சதவீத ஆப்பிள்கள் பாதிப்புக்குள்ளானதில், சுமார் ரூ.2,500 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x