Published : 30 Mar 2019 05:29 PM
Last Updated : 30 Mar 2019 05:29 PM
மராட்டிய இனத் தலைவர் பிரவீண் கெய்க்வாட் மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் முன்னிலையில் இன்று (சனிக்கிழமை) காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
மும்பையில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியொன்றில், மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மகாராஷ்டிரா காங்கிரஸின் மாநிலத் தலைவர் அசோக் சவான் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோர் முன்னிலையில் பிரவீண் கெய்க்வாட் காங்கிரஸில் சேர்ந்தார்.
பிரவீண் பின்னணியில் ஒரு குறிப்பிட்ட சமுதாய வாக்குகளின் பலம் பெரும் எண்ணிக்கையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. பாரம்பரிய இனமான மராட்டிய இனத்தின் முதல் அரசர் சத்ரபதி சிவாஜி என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிராவில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சி 24 தொகுதிகளையும் தேசியவாதக் காங்கிரஸ் என்சிபி கட்சி 20 தொகுதிகளையும் பகிர்ந்துகொண்டுள்ளன.
காங்கிரஸ் தலைமையிலான மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மற்ற கூட்டணி கட்சிகளான பகுஜன் விகாஸ் அகாடி ஒரு தொகுதியிலும், ஸ்வாபிமணி சேத்காரி சங்காதனா இரு தொகுதிகளிலும் யுவ ஸ்வாபிமாணி பக்ஷா ஒரு தொகுதிகளிலும் போட்டியிருக்கின்றன.
மகாராஷ்டிராவில் வரும் ஏப்ரல் 11 தொடங்கி நான்கு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மராட்டிய இனத் தலைவர் காங்கிரஸில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT