Last Updated : 04 Mar, 2019 12:17 PM

 

Published : 04 Mar 2019 12:17 PM
Last Updated : 04 Mar 2019 12:17 PM

மால்குடி டேஸ் நாவலில் வரும் மால்குடி கிராமம் இருக்கிறதா, ரயில் நிற்குமா? -கர்நாடக எம்.பி.யின் ஆசை

புகழ்பெற்ற எழுத்தாளர் ஆர்.கே. நாராயண் எழுதிய மால்குடி டேஸ் நாவலில் வரும் மால்குடி கிராமத்தின் பெயரை கர்நாடகாவில் உள்ள அரசலு கிராமத்துக்கு வைக்க சிவமோகா எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.

எழுத்தாளர் ஆர்.கே.நாராயண் எழுதிய மால்குடி டேஸ் எனும் நாவல் தொலைக்காட்சி தொடராக வெளியாகியது. இந்த தொடரை ஆனந்த் நாக் என்பவர் இயக்கி இருந்தார். இந்த தொடரில் வரும் மால்குடி எனும்  ஊர் உண்மையில் இல்லை. ஆனால், கர்நாடக மாநிலம், சிவமோகா நகரிலிருந்து 34 கி.மீ தொலைவில் இருக்கும் அரசலு கிராமத்தில்தான் இந்த தொடர் எடுக்கப்பட்டது. அந்த அரசலு ஊரைத்தான் மால்குடி என்று பெயரிடப்பட்டது.

இந்நிலையில், புகழ்பெற்ற அந்த மால்குடி எனும் பெயரை அரசலு கிராமத்துக்குச் சூட்டக் கோரி, கர்நாடகாவின் சிவமோகா தொகுதி எம்.பி. பி.ஒய் ராகவேந்திரா ரயில்வே நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 2011-ம் ஆண்டு, எஸ்எஸ். கிருஷ்ணா மத்திய அமைச்சராக இருந்தபோது, யஷ்வந்த்பூர்- மைசூர் இடையே செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு மால்குடி எக்ஸ்பிரஸ் எனும் பெயர் மாற்ற உதவினார். ஆனால், அந்த தொடர் எடுக்கப்பட்ட அரசலு கிராமத்துக்கு மால்குடி எனும் பெயர் வைக்கப்படவில்லை. ஆனால், இப்போது அந்த முயற்சியை எம்.பி. ராகவேந்திரா கையில் எடுத்துள்ளார். இதற்கு ரயில்வே துறையிடம் இருந்து அனுமதியும் கிடைத்துள்ளது.

சிவமோகாவில் இருந்து தலகுப்பா நகரங்களுக்கு இடையே இந்த அரசலு ரயில்நிலையம் அமைந்துள்ளது. பசுமையாக மரங்களுக்கு நடுவே ரயில் செல்லும் காட்சி பார்க்க ரம்மியாக இருக்கும்.

இது குறித்து எம்.பி. ராகவேந்திரா தி இந்துவிடம்(ஆங்கிலம்) கூறுகையில், " அரசலு ரயில்நிலையத்தை மால்குடி எனப் பெயர் மாற்ற வேண்டும் எனும் கோரிக்கையை ரயில்வே துறைக்கு அனுப்பிவைத்தேன். மால்குடி அருங்காட்சியகமும் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது. அதற்கு ரயில்வே துறையிடம் இருந்து சம்மதம் தெரிவிக்கப்பட்டது. இதற்கான நிதியுதவி எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வழங்கப்படும்" எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே மால்குடி டேஸ் நாவலை எழுதிய ஆர்.கே. நாரயண் மால்குடி ஊர் குறித்து கூறுகையில், " மால்குடி எனும் ஊர் எனது கற்பனை ஊர். இந்த ஊர் குறித்து சிகாகோவில் உள்ள சர்வதேச வரைபடத்தில் பார்த்தாலும் கண்டுபிடிக்க முடியாது. தென் இந்தியாவில் இருக்கும் சிறிய கிராமம் மால்குடி. அவ்வளவுதான். மால்குடி கிராமத்தில் இருக்கும் மக்கள், கதாபாத்திரங்கள் பரந்துபட்டது " எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x