Last Updated : 02 Mar, 2019 03:03 PM

 

Published : 02 Mar 2019 03:03 PM
Last Updated : 02 Mar 2019 03:03 PM

எல்லையோரத்தில் வசிக்கும் தங்கள் குடும்பத்தினரைப் பற்றி கவலைப்படும் புலம்பெயர்ந்த காஷ்மீரிகள்

இமாச்சலப் பிரதேசத்திற்கு பிழைப்புதேடி வந்த ஆயிரக்கணக்கான காஷ்மீரி கூலித் தொழிலாளிகள் எல்லைப்பகுதிகளில் பதட்ட நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து உறவினர்களைக் காண காஷ்மீருக்கு திரும்பிக்கொண்டிருக்கின்றனர்.

காஷ்மீரில் பிப்ரவரி 14 அன்று புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்ததை அடுத்து கடந்த இரண்டு வாரங்களாக அங்கு கடும் நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சர்வதேச எல்லைப்பகுதிகளில் வாழும்  தங்களது அன்புக்குரியவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதைக் காண ஆயிரக்கணக்கான காஷ்மீரிகள் தங்கள் சொந்த மண்ணிற்கு திரும்பிக்கொண்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன.

இமாச்சலப் பிரதேசத்தில் செய்துகொண்டிருந்த தங்கள் வேலைகளை விட்டுவந்த பலரும் தங்கள் அன்புக்குரியவர்களை மோசமான சூழ்நிலையில் விட்டுவிட்டு செல்ல மனமின்றி காஷ்மீரில் உள்ள தங்கள் குடும்பத்தினரோடு தங்கிவிட்டனர்.

சிலரோ காஷ்மீரின் மோசமான சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு செல்லமுடியாதவர்களாக இருக்கிறார்கள்.

இமாச்சலப் பிரதேசத்திற்கு புலம்பெயர்ந்த காஷ்மீரி மாக்சூத் இதுகுறித்து ஏஎன்ஐயிடம் தெரிவிக்கையில், ''நிறைய பேர் காஷ்மீருக்கு திரும்பிச் சென்றுள்ளனர்.

அவர்களின் குடும்பங்கள் அங்குதான் உள்ளன. ஆனால் என்னைப் பொறுத்தவரை சிம்லா ஒரு சிறந்த இடமாக இருக்கிறது. நாங்கள் இங்கு எந்தப் பிரச்சினையையும் சந்திக்கவில்லை. இந்த நிலையில் அங்கு போகவேண்டாம் என நினைக்கிறேன்'' என்றார்.

இன்னொருவர் அப்துல், ஒரு காஷ்மீரிதான். இவரும் சிம்லாவைவிட்டு செல்ல மனமில்லாதவரைக இருக்கிறார். அவர் கூறுகையில், ''நானும் திரும்பிப் போக விரும்பவில்லை. ஆனால் வீட்டில் உள்ளவர்கள் என்னை தங்களுடன் வந்து இருக்கும்படி அழைக்கிறார்கள். ஆனால் நான் என் குழந்தைகளை நினைத்துதான் கவலைப்படுகிறேன்'' என்றார்.

ஜம்மு மற்றும் காஷ்மீரிலிருந்து கிட்டத்தட்ட 30,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இமாச்சல பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் வேலை செய்கின்றனர்.

அவர்களில் கிட்டத்தட்ட 30 சதவீதம் பேர் அதாவது 8 ஆயிரம்பேருக்கு மேல் காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு திரும்பியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x