Last Updated : 08 Mar, 2019 01:45 PM

 

Published : 08 Mar 2019 01:45 PM
Last Updated : 08 Mar 2019 01:45 PM

இந்திய குடியுரிமை பெற்ற 45 பாகிஸ்தானியர்கள்

இந்தியாவுக்கு புலம்பெயர்ந்து கடந்த பல ஆண்டுகளாக மும்பையில் வசித்துவரும் 45 பாகிஸ்தானியர்களுக்கு மகராஷ்டிரா மாநில அரசு இந்திய குடியுரிமை வழங்கியுள்ளது.

இதற்கான உத்தரவை நேற்று (வியாழக்கிழமை) புனே மாவட்ட நிர்வாகம் வழங்கியது.

தங்கள் சொந்த நாட்டில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் சிறுபான்மையாக உள்ள  இந்துக்கள், பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்து வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் நேவல் கிஷோர் ராம் தெரிவித்தாவது:

புனே, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 45 பேருக்கும் ஒரு சான்றிதழை வழங்கியுள்ளது. இவர்களின்  விண்ணப்பங்கள் அனைத்தும் வெளியுறவு துறை அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களில், பல்வேறு மட்டங்களில் பல ஆண்டுகளாக தாமதமாகிவந்தன.

இவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கான கடினமான செயல்முறை பல மாதங்கள் மற்றும் பல ஆண்டுகளை எடுத்துக்கொண்டது. தற்போது எந்த இடையூறும் இல்லை. நல்லவேளையாக அந்த முயற்சிகள் நிறைவடைந்துவிட்டன.

குடியுரிமைச் சட்டத்தில் திருத்தங்கள் உருவான பிறகு, மாவட்ட கலெக்டர் சிறுபான்மையினர் விண்ணப்பதாரர்களுக்கு குடியுரிமை கொடுக்க அதிகாரம் ஏற்பட்டது. 

சட்டத்திருத்தத்தின்படி உளவுத்துறையின் அனுமதி வந்தபிறகு இவர்களுக்கு நான் குடியுரிமையை வழங்கினேன். அனைத்து விண்ணப்பதாரர்களையும் ஒரே நாளில் கையெழுத்திட அழைத்தேன்.

அவர்கள் அனைவரது வாக்குமூலங்களும் பெறப்பட்டு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. தற்போது அவர்கள் இந்திய குடியுரிமை பெற்றுள்ளனர்.

குடியுரிமை பெற்றுள்ளது குறித்து கருத்து தெரிவித்த புலம்பெயர்ந்த ஜெய்காஷ் நெப்வானி தெரிவிக்கையில், நாங்கள் பாகிஸ்தானில் ஏராளமான தொல்லைகளை அனுபவித்தோம். இங்கு வந்த பின்னர் இந்தியக் குடியுரிமை பெறவும் நிறைய போராட்டங்களைச் சந்தித்தோம். இறுதியில் நாங்கள் குடியுரிமை பெற்றுவிட்டோம்'' என்றார்.

இன்னொரு புலம்பெயர்ந்தோர் லாஜ் விர்வானி தெரிவிக்கையில், இது 20 ஆண்டுகளுக்கு முன் ஒரு திருமணத்திற்காக இங்கே வந்தோம். அப்போது நான் எனது கணவரிடம் தெரிவித்தேன். நாம் இனிமேல் இங்கேயே இருந்துவிடலாம். என்று. ஏனென்றால் பாகிஸ்தானில் கடத்தல் மற்றும் பிற விஷயங்களுக்காக அங்கே எங்கள் வீடுகளுக்கு வெளியே வருவதற்குக் கூட நாங்கள் பயந்தோம்.

ரக்ஷி அஸ்வானி கூறுகையில், நான் 2008ல் இங்கே வந்தேன். அதற்குக் காரணம் என் பாகிஸ்தானிய பாஸ்போர்ட்தான். இந்தியாவிலிருந்து மீண்டும் வெளியேறுவதற்கு இந்த பாஸ்போர்ட் மிகவும் தொந்தரவாக இருந்தது. பிலிப்பைன்ஸில் எனது குடும்பத்தைச் சந்திப்பதற்குகூட நான் அரசாங்கத்திடம் சிறப்பு அனுமதி பெற வேண்டும். ஆனால் இப்போது நான் இந்திய குடியுரிமை பெற்றுள்ளேன், எங்கும் செல்ல முடியும்.'' என்றார்.

ஓம் பிரகாஷ் என்பவர் தெரிவிக்கையில், ''பாகிஸ்தான் 'பாதுகாப்பற்ற' இடம் என்று வலியுறுத்தினார். அங்கு, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வெளியே விடுவதற்குக் கூட  பயப்படுகிறார்கள். காரணம் அங்கு கடத்தலும் இன்னும் பல குற்றங்களுமே காரணம்'' என்றார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x